அம்ரிதா ஐயர் தமிழ் திரையுலகில் குறிப்பிடப்படாத கௌரவ தோற்றத்தில் தோன்றி நாயகியாக நடித்து புகழ்பெற்றவர். தற்போது தமிழ் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் பிரபலமாக நடித்து வருகிறார்.
பிறப்பு/ திரையுலக அறிமுகம்
அம்ரிதா ஐயர் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் பிறந்துள்ள இவர், திரையுலகில் ஆர்வம் கொண்டு மாடெலிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார்.
பெங்களூரில் உள்ள ஸ்ட. ஜோசப் கல்லுரியில் தனது இளங்கலை பட்டத்தினை பெற்றுள்ள இவர், ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றிக்கொண்டு தனது தோழிகளுடன் மாடெலிங் துறையிலும் பங்குபெற்று வந்துள்ளார்.
அம்ரிதா ஐயர் தமிழில் 2016ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற விஜய்யின் தெறி திரைப்படத்தில் யாரும் குறிப்பிடப்படாத ஒரு கௌரவ தோற்றத்தில் தோன்றி திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தினை தொடர்ந்து இவர், 2018-ம் ஆண்டு வெளியான படைவீரன் திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகின் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளார்.
இவர் படைவீரன் திரைப்படத்தில் நாயகியாக நடித்ததற்காக இவர் சிறந்த அறிமுக நடிகைக்கான பட்டியலில் பல திரைத்துறை சார்ந்த விருதுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். பின்னர் அதே ஆண்டு காளி திரைப்படத்தில் நடிகர் விஜய் ஆன்டனிக்கு ஜோடியாக தேன்மொழி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பிரபலம்
சில திரைப்படங்களில் நடித்து தமிழில் ஒரு நாயகியாக அறிமுகமாகினாலும் இவரது திரைவாழ்வில் 2019-ம் ஆண்டு வெளியான பிகில் திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பலரால் பாராட்டப்பட்டு பிரபலமானது. இதனை தொடர்ந்து தமிழ் திரையுலகில் பிரபலமான இவர் கன்னடம் மற்றும் தமிழ் திரையுலகில் பல திரைப்படங்களில் நாயகியாக ஒப்பந்தமாகி பிரபலமாகியுள்ளார்.
திரைப்பயணம்
கர்நாடகாவில் பெங்களூரை பிறப்பிடமாக கொண்டுள்ள அம்ரிதா ஐயர், தமிழ் திரையுலகில் அறிமுகமாகி புகழ்பெற்றவர். இதன் மூலம் கன்னட மொழி திரைப்படங்களில் திரைவாய்ப்பினை பெற்று பிரபலமாகியுள்ளார். இவர் 2019-ம் விஜய்யின் பிகில் திரைப்படத்தில் ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இவரது கதாபாத்திரம் பலரால் பாராட்டப்பட்டது. இப்படத்தினை மூலம் தமிழ் திரையுலகில் இவருக்கென ஒரு ரசிகர்களை கொண்டுள்ளார் அம்ரிதா ஐயர்.