twitter
    Celebs»B. Saroja Devi»Biography

    சரோஜா தேவி பயோடேட்டா

    சரோஜா தேவி இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். திரைத்துறையில் பிரபலமான நடிகைகளுள் இவரும் ஒருவர். இவரை கிட்டத்தட்ட 200 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவரை கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என பல புனை பெயர்கள் இவரது நடிப்பால் கிடைக்கப்பெற்றவை. 

    இவரது 14 -ம் வயதில் மகாதேவி காளிதாசா என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் 1955 -ல் திரைத்துறைக்கு அறிமுகமானார். இவரது 29 -ல் கிட்டத்தட்ட 161 திரைப்படங்களில் நடித்துவிட்டார். இவரது நடிப்பிற்க்காக பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார். 

     சரபோஜா தேவி கர்நாடக மாநிலம் மைசூரில் ஜனவரி 7 , 1942 -ல் பிறந்தார். இவரது தந்தை போலீஸ் அதிகாரி, தாயார் வீட்டில் இருப்பவர். சரோஜா தேவி தன் பெற்றோர்க்கு நான்காவது பெண் குழந்தையாகும். அதானல், இவரது தாத்தா இவரை யாருக்காவது தத்து கொடுத்துவிடலாம் என்று கூற, இவரது தந்தை அதனை மறுத்துவிட்டு தன் பிள்ளைக்கு நடனம் கற்க வைத்து சரோஜா தேவியின் நடிப்பு திறமைக்கு ஊக்கமளித்தார். சரோஜா தேவியின் தாயார் அவருக்கு உடை விஷயத்தில் சில கண்டிஷன்கள் போட்டுள்ளார். அதாவது நீச்சல் உடை, கை இல்லாத சட்டை அணிவிக்க கூடாது போன்றவை. சரோஜா தேவி தனது நடிப்பு பயணத்தின் இறுதி வரை தனது தாயாரின் வார்த்தைக்கு மதிப்பளித்துள்ளார். 

    சரோஜா தேவி, ஸ்ரீஹர்ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்திற்கு பின்பு பல குடும்ப பொருளாதார சிக்கல்களை சந்தித்துள்ளனர். இவரது நடிப்பிற்கு இவரது கணவர் பெரும் துணை நின்றுள்ளார். 1967 -ல் இணைந்த திருமண பந்தம் 1986 -ஆம் ஆண்டு கணவரின் இறப்பிற்கு பின்பு முடிவடைந்துவிட்டது. 

    சரோஜா தேவிற்கு மூன்று குழந்தைகள், அதில் புவனேஸ்வரி என்பவர் இவர் தத்து எடுத்த குழந்தை. அவரது இறப்பிற்கு பின்பு அவர் நினைவாக அவரது பெயரில்  புவனேஸ்வரி விருதுகள் என்று இலக்கியத்திற்க்காக வழங்கப்படுகிறது. இவரது மற்ற இரு குழந்தைகள் இந்திரா, இந்திரா காந்தியின் நினைவாகவும், கவுதம் ராமசந்திரன், எம் ஜி ராமச்சந்திரன் நினைவாகவும் பெயர் வைத்துள்ளார்.