X
பாலா சிங்
Actor

பாலா சிங் பயோடேட்டா

பாலா சிங் தென்னிந்திய திரைத்துறையில் துணை கதாபாத்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றவர், இவர் 1995-ம் ஆண்டு தமிழில் வெளியான அவதாரம் திரைப்படத்தில் ஒரு வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்து பிரபலமாகியுள்ளார். இப்படத்திற்கு முன்பு இவர் மலையாள திரையுலகில் நடித்து வந்துள்ளார்.

பிரபலம்
பாலா சிங், சிறுவயதில் இருந்து நடிப்பில் ஆர்வம் கொண்டுள்ள இவர், நாடக மேடைகளிலும், கூத்து பட்டறைகளிலும் நடித்து நடிப்பில் அனுபவம் பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து இவர், தேசிய நாடக பள்ளியில் பயிற்சி பெற்று 1995-ம் ஆண்டு நாசர் நடிப்பில் வெளியான அவதாரம் திரைப்படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பலரால் பாராட்டப்பட்டதை தொடர்ந்து, இவர் தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி இயக்குனர்களான ஷங்கர், மணிரத்னம் படங்களில் நடிக்க வாய்ப்பினை பெற்று தமிழ் திரையுலகில் பிரபலமாகியுள்ளார்.
 
இறப்பு
தமிழ் திரைப்படங்களில் பிரபல கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வந்துள்ள இவர், 2019-ம் ஆண்டு நவம்பர் 27ல் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் 2019-ம் ஆண்டு மட்டுமே தமிழில் 5 திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+