பாலாஜி மோகன் பயோடேட்டா

    பாலாஜி மோகன் ஒரு தமிழ் திரைப்பட இயக்குனர். இவர் 2012ஆம் ஆண்டு காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டு வாயை மூடி பேசவும் என்ற திரைப்படத்தை இயக்கினார்.

    பாலாஜி மே 25, 1987ஆம் ஆண்டு திருச்சியில் பிறந்தார். இவரது தாய் தமிழ் மற்றும் தந்தை தெலுங்கு இனத்தைச் சேர்ந்தவர்கள்.

    இவர் 2009ஆம் ஆண்டு குளிர் 100° என்ற திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார். அதைத் தொடர்ந்து இவர் சில குறும் திரைப்படங்களை இயக்கினார். 2010ஆம் ஆண்டு சுதா கே. பிரசாத் இயக்கிய துரோகி என்ற திரைப்படத்திலும் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார். அதைத் தொடர்ந்து கோடி, த ஜூனியர்ஸ் , ஆட்டி தில், மிட்டாய் வீடு மற்றும் காதலில் சொதப்புவது எப்படி போன்ற போன்ற 5 குறும் திரைப்படங்களை இயக்கினார். 2012ஆம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அமலா பால் வைத்து காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தை இயக்கினார். அதை தொடர்ந்து 2014ஆம் ஆண்டு வாயை மூடி பேசவும் என்ற திரைப்படத்தை இயக்கினார்.