twitter

    சித்ரா லக்ஷ்மணன் பயோடேட்டா

    சித்ரா லக்ஷ்மணன் இந்திய தமிழ் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குனரும் ஆவார். இவர் திரைத்துறைக்கு 1983-ம் ஆண்டு மண் வாசனை திரைப்படத்தினை தயாரித்து தயாரிப்பாளராக தமிழ் திரையில் அறிமுகமானவர். இத்திரைப்படத்தினை தொடர்ந்து 1984-ம் ஆண்டு புதுமை பெண் திரைப்படத்தில் நடிகராகவும் நடித்துள்ளார். 1988-ம் ஆண்டு சூரா சம்ஹாரம் திரைப்படத்தினை இயக்கி இயக்குனராகவும் திரைத்துறையில் பங்காளித்துள்ளார்.

    இவர் வெள்ளித்திரையினை தொடர்ந்து 2006-ம் ஆண்டு ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கங்கா யமுனா சரஸ்வதி தொடரில் நடித்துள்ளார். பின்னர் இதயம், சொந்த பந்தம், அக்கா, சந்திரலேகா என தொலைக்காட்சி நாடக தொடர்களில் நடித்து வருகிறார்.

    இவர் பல திரைப்படங்களில் நடித்து திரைத்துறையில் பணியாற்றிருந்தாலும் 2010-ம் ஆண்டு வெளிவந்த பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற தமிழ் நகைச்சுவை திரைப்படத்தில் நடித்து பிரபலமாக அறியப்பட்டார்.