twitter
    Celebs»Crazy Mohan»Biography

    கிரேசி மோகன் பயோடேட்டா

    கிரேசி மோகன் இந்திய திரைப்பட நகைச்சுவை நடிகரும், மேடை நாடக கலைஞரும் ஆவார். இவர் திரையுலகில் நகைச்சுவை நடிகர், திரைக்கதை எழுத்தாளர், நாடக அமைப்பாளர் ஆவார். தனது பட்டபடிப்பினை முடித்த இவர் நாடக துறையில் சேர்ந்து பின்னை நாடக அமைப்பாளராகவும், நாடக எழுத்தாளராகவும் பணியாற்றிவந்துள்ளார். 

    1979-ல் கிரேசி கிரேஷன்ஸ் என்ற நாடக நிறுவனம் ஒன்றினை நிறுவி தொகுத்து வந்துள்ளார். பின்னர் தொலைக்காட்சி தொடர்களில் வசன எழுத்தாளராகவும், நகைச்சுவையாராகவும் பணியாற்றி வந்துள்ளார்.

    இவர் 30-ற்கும் மேல் திரைப்படங்களில் வசன எழுத்தாளராக பணியாற்றிய இவர், 40-ற்கும் மேல் திரிப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் 100-ற்கும் மேல் சிறு கதைகளை எழுதியுள்ளார்.

    அறிமுகம் / தொடக்கம் 

    தமிழகத்தில் சென்னையில் உள்ள கிண்டி கல்லூரியில் இயந்திரவியல் பொறியாளர் பட்டத்தினை 1973-ம் ஆண்டு கற்றறிந்த இவர். ஒரு தனியார் நிறுவதில் பணியாற்றி வந்துள்ளார். இவரின் கல்லூரி காலகட்டத்தில் 1972-ம் ஆண்டு இவர் எழுதிய கிரேட் பேங்க் ரொப்பெரி என்ற நாடகத்திற்கு கதை எழுத்தாளர், ஒருங்கிணைப்பாளராகவும் நடிகராவும் பணியாற்றியுள்ளார். இதற்காக இவருக்கு சிறந்த நடிகர் மற்றும் சிறந்த எழுத்தாளர் பரிசினை அந்த விழாவின் தலைமை விருதினராக கலந்துகொண்ட கமல்ஹாசனிடம் பரிசினை பெற்றுள்ளார்.

    ஒரு சில நிறுவனத்திற்கு பணியாற்றிய இவர், சொந்தமாக கிரேஷி கிரேஷன்ஸ் என்ற நாடக நிறுவனத்தை நிறுவினார். அந்நிறுவனத்திற்கு ஒருங்கிணைப்பாளராகவும், திரைக்கதை மற்றும் வசன எழுத்தாளராகவும் பணியாற்றிவந்துள்ளார். இதன் பிரபலம் கொண்டே திரையுலகில் தொலைக்காட்சி தொடரிற்கு திரைக்கதை மாற்றும் வசன எழுத்தாளராக பணியாற்றி பிரபலமாகியுள்ளார். இதன் தொடர்பு கொண்டு வெள்ளித்திரையிலும் திரைக்கதை மாற்றும் வசன எழுத்தாளராக பணியாற்றிவுள்ளார்.

    வெள்ளித்திரையில் கே.பாலச்சந்தரின் பொய்க்கால் குதிரை திரைப்படத்திற்கு வசன எழுத்தாளராக பணியாற்றி பிரபலமான இவர், இத்திரைப்படத்தில் ஒரு சில திரைக்கதை அமைப்புகளை மாற்றியுள்ளார். இப்படத்திற்கு பின்னர் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களான தெனாலி, வசூல் ராஜா, பஞ்ச தந்திரம், அபூர்வ சகோதரர்கள், அவ்வை சண்முகி, இந்தியன் போன்ற திரைப்படங்களுக்கு நகைச்சுவை மற்றும் வசன எழுத்தாளராக பணியாற்றியுள்ளார். இதன் அறிமுகம் கொண்டு திரைப்படங்களில் கௌரவ தோற்றங்கள் மற்றும் ஒரு சில கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமாணவர்.

    1989-ம் ஆண்டு கல்யாணத்துக்கு கல்யாணம், ஹியர் ஐஸ் கிரேஷி, விடாத சிரிப்பு என பல நகைச்சுவை தொடர்களை 600-ற்கும் மேற்பட்ட அத்தியாயத்தில் பணியாற்றியுள்ளார்.

    அங்கீகாரம்

    இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருதினை வழங்கியுள்ளது. மேலும் ப்ரோபஸ்னல் எக்ஷ்சலன்ஸ் என்ற சர்வதேச விருதினை அமெரிக்கா நாடு வழங்கியுள்ளது.

    இறப்பு

    இவர் சென்னை மருத்துவமனையில் உடல்நிலை சரியின்றி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மாரடைப்பு காரணத்தால் 2019-ம் ஆண்டு ஜூன் 10-ல் காலமானார்.