டேனியல் பாலாஜி - தமிழ் சினிமா நடிகர், 'டி சி பாலாஜி' என்ற பெயரின் மூலம் அறிமுகமான இவர் திரைத்துறையில் டேனியல் பாலாஜி என பலர் மத்தியில் பிரபலமாகியுள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து பலரின் அறிமுகத்தை பெற்று புகழ் பெற்றவர்.
பிறப்பு
டேனியல் பாலாஜி, தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்தவர். இவரது தாயார் தமிழ் பேசுபவர் ஆவார். சென்னையில் உள்ள தரமணி பிலிம் கல்லூரியில் படித்து பட்டம் வென்ற டேனியல் பாலாஜி, பின் தனது சினிமா ஆசையில் தனது குடும்பத்தினர் உதவியில் திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார்.
இவரது மாமா 'சித்தா லிங்கய்யா' கன்னட சினிமாவின் பிரபல இயக்குனர் ஆவார், மேலும் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான முரளியின் தம்பி ஆவார், டேனியல் பாலாஜி. சினிமா குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர், எளிதாக தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார்.
திரைப்பயணம்
டேனியல் பாலாஜி, தனது திரைப்பயண ஆரம்ப காலத்தில் புரொடக்சன் ஆய்வாளராக பணியாற்றியுள்ளார். கமல்ஹாசன் இயக்கி, நடித்த மருதநாயகம் திரைப்படத்தில் இவர் புரொடக்சன் குழுவில் ஒருவராக பணி செய்துள்ளார்.
நடிகராக டேனியல் பாலாஜி, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சித்தி சீரியலில் நடித்திருந்தார். சித்தி சீரியலில் 'டேனியல்' கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான இவர், அந்த சீரியலுக்கு பின் அலைகள் சீரியலில் நடித்திருந்தார். அச்சமயம் முதல் சீரியலில் இவர் பெற்ற அடையாளத்தினை இணைந்து 'டேனியல் பாலாஜி' என அறியப்பட்டார்.
வெள்ளித்திரையில் நடிகர் டேனியல் பாலாஜி 'ஏப்ரல் மாதத்தில்' திரைப்படத்தில் நடித்து தனது திரைப்பட பயணத்தை தொடங்கியுள்ளார். பின்னர் காதல் கொண்டேன், காக்க காக்க ஆகிய படங்களில் ஒரு சில கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ள இவர், இயக்குனர் கவுதம் மேனன் இயக்கிய 'வேட்டையாடு விளையாடு' திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பலர் மத்தியில் பிரபலமானார்.
வேட்டையாடு விளையாடு திரைப்படத்திற்கு பின் இவரது கதாபாத்திரம் மற்றும் நடிப்பு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர், ஒரு சில குணச்சித்திர கதாபாத்திரங்களில் அவ்வப்போது நடித்துள்ளார்.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன், வடசென்னை ஆகிய படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தினை பெற்றுள்ளார், டேனியல் பாலாஜி.
டேனியல் பாலாஜி பெஸ்ட் 5 மூவிஸ்
- பொல்லாதவன்
- வடசென்னை
- வேட்டையாடு விளையாடு
- பிகில்
- வை ராஜா வை
இறப்பு
நடிகர் டேனியல் பாலாஜி, சென்னையில் 2024 மார்ச் 29ல் நள்ளிரவில் மாரடைப்பு காரணமாக உயிலிருந்தார். அவருக்கு வயது 48.