twitter
    Celebs»Devayani»Biography

    தேவயாணி பயோடேட்டா

    தேவயாணி இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் பெங்காலி போன்ற மொழிகளில் நடித்து வரும் பிரபல நடிகையாவார். இவர் நடித்த காதல் கோட்டை, சூர்யா வம்சம், பாரதி மற்றும் பல திரைப்படங்களில் தனது நடிப்பால் முத்திரை பதித்தவர். திரைப்படங்கள் மட்டுமில்லாமல் சன் டிவியில் ஒளிப்பரப்பான கோலங்கள், முத்தாரம் போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். 90 மற்றும் 2000-த்தில் முன்னணி நடிகைகளுள் இவரும் ஒருவராக திகழ்ந்தவர்.

    தேவயானி மும்பையில் பிறந்தவர். நடிகர் நகுல் இவரது தம்பி ஆவார். இயக்குனர் ராஜகுமாரன் என்பவரை காதலித்து திருமணம் செய்தது கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இனியா, பிரியங்கா என்ற இரு பெண் குழந்தைகள் உள்ளனர். திரையுலகில் இவர் பல்வேருன் விருதுகளையும் பெற்றுள்ளார்.