காயத்ரி ஷங்கர் தமிழ் திரைப்பட முன்னணி நடிகை ஆவார். இவர் 2012-ம் ஆண்டு தமிழில் 18 வயசு திரைப்படத்தில் நடித்து நாயகியாக அறிமுகமாகியுள்ளார். ஆனால் இத்திரைப்படம் இவரின் திரையுலக பயணத்திற்கு கைகொடுக்கவில்லை. பின்னர் அதே ஆண்டு நடுவுல கொஞ்சம் பக்கத்த கானம் திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானார்.
பிறப்பு
காயத்ரி ஷங்கர் கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் பிறந்து வளர்த்துள்ள தமிழ் வம்சாவழியை சேர்ந்தவர். இவரின் தாத்தா ராணுவ அதிகாரியும், தந்தை இந்திய விமானப்படையில் பணியாற்றியவர்கள். இவர் 12ஆம் வகுப்பு பயிலும் போதே இவருக்கு ஏன் இப்படி மயக்கினாய் என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிட்டியது, பின்னர் 18 வயசு திரைப்படத்தில் நடித்து திரையில் அறிமுகமாகியுள்ளார்.
இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளை கற்றறிந்தவர். மேலும் ஸ்பானீஷ் மொழியை கற்று வருகிறார்.
திரையுலக அனுபவம்
காயத்ரி ஷங்கர், 2013-ம் ஆண்டு விஜய் சேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் திரைத்துறையில் அறியப்பட்டார். பின்னர் பொன்மாலை பொழுது, மத்தாப்பு, ரம்மி போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார்.
தற்போது பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் இவர், ஒரு சில திரைப்படங்களில் கௌரவ தோற்றத்திலும் நடித்துள்ளார். இவர் 2019ம் ஆண்டு சூப்பர் டீலக்ஸ், கே 13, மற்றும் சித்திரம் பேசுதடி 2 திரைப்படத்தினை தொடர்ந்து ஃபிங்கேர் டிப் என்னும் இணையதள வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்துள்ளார். பின்னர் ஆர் பார்த்திபன் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படத்தில் உஷா என்னும் கதாபாத்திரத்திற்கு குரல் அளித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் தற்போது சிறு பட்ஜெட் திரைப்படங்களில் மட்டும் தொடர்ந்து நடித்து வரும் இவர், தனக்கென ஒரு அடையாளத்தையும் நேர்த்தியையும் உருவாக்கி ரசிகர்கள் மத்தியில் தனித்துவமான பிரபலமாக அறியப்படுகிறார்.