twitter
    Celebs»Geethu Mohandas»Biography

    கீத்து மோகன்தாஸ் பயோடேட்டா

    கீது மோகன்தாஸ் இந்திய திரைப்பட இயக்குனரும் நடிகையும் ஆவார். 2014-ம் ஆண்டு இவர் இயக்கிய அரசியல் படமான "லியார் டிஸ்" என்னும் ஹிந்தி திரைப்படம் இரண்டு தேசிய விருதினை பெற்றுள்ளது. மேலும் இத்திரைப்படமானது இந்திய அரசினால் ஆஸ்க்கார் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    இவர் 1988-ம் ஆண்டு "என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு" திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையில் அறிமுகமானவர். பின்னர் 2003-ம் ஆண்டு " தமயந்தி", 2006-ம் ஆண்டின் "பொய்" ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

    காயத்திரி மோகன்தாஸ் என்னும் இயற்பெயர் கொண்ட இவர் 1986-ம் ஆண்டு மோகன்லாலுடன் "ஒன்னு முதல் பூஜ்யம் வாறே" என்னும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இத்திரைப்படத்தின் மூலம் கீது மோகன்தாஸ் என அறியப்பட்டார். இத்திரைப்படத்தின் மூலம் இவர் குழந்தை நட்சத்திரமாய் திரையுலகிற்குள் அறிமுகமானவர்.

    இவர் 1981, ஜூன் 8ல் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் பிறந்துள்ளார். இவரின் தாய் தமிழை பூர்விகமாய் கொண்டவர், இவருக்கு அர்ஜுன் என்னும் தமயனும் உண்டு. 2009-ம் ஆண்டு நவம்பர் 14ல் ராஜீவ் ரவி என்னும் ஒளிப்பதிவாளருடன் கொச்சியில் திருமணம் நடந்தது, தற்போது இவர்களுக்கு ஆராதனா என்னும் மகள் உள்ளார்.