X
ஹுமா குரேஷி
Actress

ஹுமா குரேஷி பயோடேட்டா

ஹுமா குரேஷி இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 2018-ம் ஆண்டு காலா திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானவர் ஆவார். இத்திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமாகியுள்ளார்.

இவர் 2012-ம் ஆண்டு கெங்ஸ் ஒப்பி வசுசேய்புர என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர். பின்னர் பல திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமானவர். இவர் ஹிந்தி, தமிழ், மலையாளம் மற்றும் ஆங்கில மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடிப்பிற்காக மூன்று முறை பிலிம்பேர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். மேலும் பல விருதுகளையும் தன் நடிப்பிற்காக பெற்றுள்ளார்.

இவர் புது டெல்லியில் உள்ள ஒரு இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். குரேசி புது தில்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றார். நாடகத் திரைப்படம் மற்றும் வடிவழகியாகவும் பணிபுரிந்த இவர், பல நாடகத் திரைப்படங்களில் நடித்து, பின்னர் மும்பையில் உள்ள ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்துடன் இரு ஆண்டுகள் ஒப்பந்தத்தில் தொலைக்காட்சி விளம்பரத்தில் நடித்துள்ளார். சாம்சங் செல்லிடத்தொலைபேசி விளம்பரத்தில் நடித்துக்கொண்டிருந்த போது இவரின் திறமையைப் பார்த்த அனுராக் காஷ்யப் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூன்று திரைப்படங்களுக்கு இவரை ஒப்பந்தம் செய்தார்.

குரேசியின் முதல் திரைப்படம் இரு பாகங்களாக வெளிவந்த குற்றத் திரைப்படமான கேங்க்ஸ் ஆஃப் வாசேப்பூர் . இந்தத் திரைப்படத்தில் துணைக் கதாப்பத்திரத்தில் நடித்தார். இதில் இவரின் நடிப்பு விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. மேலும் பல விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டார். குறிப்பாக சிறந்த அறிமுகப் பெண்நடிகை விருது மற்றும் சிறந்த பெண் துணைக்கதாப்பாத்திர நடிகைக்கான பிலிம்பேர் விருதுதிற்குப் பரிந்துரை செய்யப்பட்டார். அதன் பின் காதற் திரைப்படங்களான லவ் சுவ் டே சிக்கன் குரானா மற்றும் ஏக் தி தயான் போன்ற திரைப்படங்களில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தார். 2013 ஆம் ஆண்டில் சார்ட்ஸ் திரைப்படத்தில் படைப்பின் முதன்மை மாந்தராக நடித்தார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+