இமான் அன்னாச்சி பயோடேட்டா

    இமான் அண்ணாச்சி தமிழ் நகைச்சுவை நடிகரும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும் ஆவார். இவர் சொல்லுங்கண்ணே சொல்லுங்க, குட்டிஸ் சுட்டிஸ் போன்ற சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்களித்துவருகிறார்.

    மக்கள் தொலைக்காட்சியில் "சொல்லுங்கண்ணே சொல்லுங்க" என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றினார். அதே பெயரில் சன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியைத் தொடர்ந்தார். உடன் குட்டீஸ் சுட்டிஸ் என்ற குழந்தைகளுக்கான நிகழ்ச்சியிலும் பணியாற்றுகின்றார்.

    2006ல் சென்னை காதல் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகரானார். மரியான், நையாண்டி (திரைப்படம்) போன்ற தனுஷின் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருந்தார். விஜயுடன் வேட்டைக்காரன் திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். தற்போது கயல் என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.