twitter
    Celebs»Iswarya Menon»Biography

    ஐஸ்வர்யா மேனன் பயோடேட்டா

    ஐஸ்வர்யா மேனன், இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையளம் மற்றும் கன்னடம் மொழி திரைப்படங்களில் நடித்து திரைத்துறையில் பிரபலமானவர். இவர் 2012-ம் ஆண்டு  'காதலில் சொதப்புவது எப்படி' என்ற தமிழ் திரைப்படத்தில் யாரும் குறிப்பிடப்படாத ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர். பின்னர் அடுத்தடுத்து பல படங்களில் பல்வேறு கதாபாத்திரங்கள் தற்போது அனைவராலும் அறியப்படும் ஒரு முக்கிய நடிகையாக பணியாற்றி வருகிறார்.



    பிறப்பு

    ஐஸ்வர்யா மேனன், பிறப்பால் ஒரு கேரளா குடும்பத்தை சார்ந்தவர். இவர் தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் இடம் பெயர்ந்து தனது சிறுவயதில் இருந்து வாழ்ந்து வந்துள்ளார். தனது மேல்நிலை கல்வியை ஈரோட்டில் பயின்ற இவர், தனது கல்லூரி படிப்பினை சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் பயின்றுள்ளார். தற்போது கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சினில் வாழ்ந்து வருகிறார்.

    திரையுலக தொடக்கம்

    ஐஸ்வர்யா மேனன், சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் தனது இளங்கலை பட்டத்தினை வென்றுள்ள இவர், தமிழ் திரையுலகில் 2013-ம் ஆண்டு வெளியான "தீயா வேலை செய்யணும் குமாரு" என்ற திரைப்படத்தில் யாரும் கண்டுயறியப்படாத ஒரு மிக சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகம் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகியுள்ளார்.

    அதே ஆண்டு "ஆப்பிள் பெண்ணே" என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழில் ஒரு இளம் நடிகையாக அறிமுகமானார். 

    ஐஸ்வர்யா மேனன் தமிழ் திரைப்படத்தினை தொடர்ந்து கன்னட திரைத்துறையிலும் 2013-ம் ஆண்டு "தசவாலா" என்ற படத்தில் நடித்து கன்னட திரையுலகில் அறிமுகமானார். பின்னர் இவரது கதாபாத்திரம் கன்னட ரசிகர்களால் பெரிதும் கவனிக்கப்பட்டு சில விருதுகளையும் அளித்து இவரை கன்னட திரையுலகம் பெருமை படுத்தியுள்ளது.

    கன்னட படத்தினை தொடர்ந்து மலையாளம் படத்திலும் நடித்து தென்னிந்திய தமிழ், மலையாளம், கன்னட என மூன்று மொழி திரைப்படங்களிலும் பணியாற்றி பல ரசிகர்களின் கவனத்தை பெற்ற இவர், 2018-ம் ஆண்டு தமிழில் வெளியான "தமிழ் படம் 2" என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதினை கவர்ந்தார்.

    தற்போது தமிழ் திரையுலகில் ஒரு குறிப்பிடப்படும் நடிகையாக பணியாற்றி வரும் இவர், இணையதள பக்கங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படத்தினை பதிவேற்றி இளைஞர்களின் கவனத்தை பெற்று புகழ் பெற்றுள்ளார்.