ஜே கே ரிதீஷ் பயோடேட்டா

    ஜே.கே.ரிதீஷ் இந்திய தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2007-ம் ஆண்டு "கானல் நீர்" திரைப்படத்தில் நடித்து  திரையுலகிற்கு அறிமுகமானவர். பின்னர் 2008-ம் ஆண்டு "நாயகன்" திரைப்படத்திலும், 2010-ம் ஆண்டு "பெண் சிங்கம்" திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவர் 2019-ம் ஆண்டு "L.K.Gதிரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் இப்படத்திற்காக சம்பளம் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இவர் திரைத்துறையில் நடிகர் மட்டுமின்றி அரசியல்வாதியும் ஆவார். இவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (தி.மு,க) சேர்ந்தவர் ஆவார். இவர் 2009 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், இராமநாதபுரம் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு, இந்திய மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரான வி. சத்தியமூர்த்தியை 69,915 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார். பின்னர் ஏப்ரல் 10, 2014 அன்று முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இவர் 2019 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், ஏப்ரல் 14, 2019 அன்று மாரடைப்பு ஏற்பட்டு, உயிரிழந்தார்.

    வாழ்கை
    இவர் இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தார். பின்னர் 1976 ஆம் ஆண்டு இவரது குடும்பம் இராமேஸ்வரத்திற்கு குடிபெயர்ந்து. இவரது தந்தை விவசாயியும் மற்றும் தாயார் இல்லத்தரசியும் ஆவார். இவருக்கு சாந்தி மற்றும் மணி என இரண்டு தங்கைகள் உள்ளனர். இவர் 2006 ஆம் ஆண்டு ஜோதீஸ்வரி என்பவரைத் திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஆரிக் ரோசன் என்னும் மகன் உள்ளார். இவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முகமது சதாக் என்னும் தொழில்நுட்பக் கல்லூரியில் படிப்பை முடித்தார். பின்னர் காரைக்குடியில் உள்ள அழகப்பா பொறியியல் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.