twitter
    Celebs»K Subhash»Biography

    கே சுபாஷ் பயோடேட்டா

    கே சுபாஷ் (சங்கர் கிருஷ்ணன்) தமிழ் மற்றும் ஹிந்தி திரைப்பட பிரபல முன்னணி இயக்குனர் ஆவார், இவர் 1988-ஆம் ஆண்டு கலியுகம் என்ற தமிழ் திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். இவர் திரைப்படங்களில் இயக்குனராக பணியாற்றியை தொடர்ந்து தமிழ் மற்றும் ஹிந்தி திரையுலகில் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றி பிரபலமானவர்.

    பிறப்பு / திரையுலக தொடக்கம்

    சங்கர் கிருஷ்ணன் என்னும் இயற்பெயர் கொண்டுள்ள இவர் தமிழ் திரையுலகில் சுபாஷ் என்ற அடையாள பெயரில் புகழ் பெற்றவர். இவர் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய நாயகன் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி பிரபலமானவர்.

    இயக்குனர் மணி ரத்னமின் "நாயகன்" திரைப்படத்தில் ஒரு உதவி இயக்குனராக பணியாற்றி தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர், தமிழில் கலியுகம் என்ற திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.

    பிரபலம்

    கே. சுபாஷ் இயக்கிய முதல் திரைப்படமான "கலியுகம்" திரைப்படத்தினை தொடர்ந்து இவர், நடிகர் விஜயகாந்த் நடிப்பில் தமிழில் பிரமாண்ட வெற்றி பெற்றுள்ள "சத்ரியன்" திரைப்படத்தினை இயக்கி தமிழ் திரையுலகில் புகழ் பெற்றுள்ளார்.

    சத்ரியன் திரைப்படத்தில் பிரபல தமிழ் இயக்குனரான மணிரத்னம் திரைக்கதை எழுதியுள்ளார். பின்னர் கே. சுபாஷ் இயக்கிய நினைவிருக்கும் வரை, 123, ஏழையின் சிரிப்பில் போன்ற திரைப்படங்கள் தமிழில் பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது.

    சுபாஷ் தமிழ் திரைப்படத்தினை தொடர்ந்து ஹிந்தி திரைப்படங்களிலும் திரைக்கதை எழுத்தாளர் மற்றும் இயக்குனராக பணியாற்றி புகழ் பெற்றுள்ளார்.

    இறப்பு

    2016-ஆம் ஆண்டு நவம்பர் 23ல் சுபாஷ் உடல் நல குறைவு காரணமாக சென்னை எஸ்.ஆர். எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.