கபீர் துஹன் சிங் பயோடேட்டா

  கபீர் துஹன் சிங் தென்னிந்திய திரைப்பட நடிகர். இவர் 2015ஆம் ஆண்டு தில் என்ற தெலுங்கு திரைப்படத்தில் வில்லனாக நடித்து திரையுலகிற்குள் நடிகராக அறிமுகமானவர். தமிழில் நடிகர் அஜித் நடித்த "வேதாளம்" திரைப்படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். இவர் திரையுலகில் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகிறார்.

   

  பிறப்பு

   

  கபீர் துஹன் சிங், ஹரியானா மாநிலத்தில் உள்ள பரிதாபாத் என்ற நகரத்தில் பிறந்து வளர்த்துள்ளார். 2011 ஆம் ஆண்டு முதல் இவர் மாடெல்லிங் துறையில் ஆர்வம் கொண்டு மாடெல்லிங்கில் பணியாற்றி வந்துள்ளார். சர்வதேச அளவில் பல போட்டியில் போட்டியாளராக பங்குபெற்றுள்ள இவர், பல போராட்டங்களுக்கு பின்னர் ஒரு ஹிந்தி திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பினை பெற்று திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.

   

  திரைப்பயணம் / பிரபலம்

   

  கபீர் துஹன் சிங் 2014 ஆம் ஆண்டு ஒரு ஹிந்தி திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பினை பெற்று திரைத்துறையில் அறிமுகமானார். ஆனால் இத்திரைப்படம் தொடக்கத்திலையே நிறுத்தப்பட்டது. அதனால் படவாய்ப்பினை இழந்துள்ளார். பின்னர் தெலுங்கு திரைத்துறையில் "ஜில்" என்ற திரைப்படத்திலும் "கிக் 2" என்னும் திரைப்படத்திலும் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்து நடிகனாக அறிமுகமானார்.

   

  2015-ஆம் ஆண்டு நடிகர் அஜித் - இயக்குனர் சிவா கூட்டணியில் உருவான "வேதாளம்" திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். பின்னர் றெக்க, காஞ்சனா 3 போன்ற படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார்.

   

  இவரின் முதல் தமிழ் திரைப்படமான "வேதாளம்" இவருக்கு ஒரு அங்கீகாரத்தினை பெற்று தந்துள்ளது. இப்படத்தின் இவர் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரத்தின் பிரபலத்தின் மூலம் புகழ் பெற்ற இவர், தமிழில் ஒரு முக்கிய நடிகராக அனைவராலும் கண்டறியப்படும் நட்சத்திரமாக புகழ் பெற்றார்.