X
கார்த்திகேய
Actor

கார்த்திகேய பயோடேட்டா

கார்த்திகேய கும்மகொண்டா இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் தெலுங்கு திரைப்படத்தில் 2017 ஆம் ஆண்டு 'பிரேமதோ மீ கார்த்திக்' என்ற படத்தில் நடித்து அறிமுகமானவர். இவர் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான 'ஆர்எக்ஸ் 100' திரைப்படம் இந்தியா அளவில் பெற்ற பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இவர் புகழ் பெற்றுள்ளார். 2021 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்தின் 'வலிமை' திரைப்படத்தில் வில்லனாக நடித்து அறிமுகமாகியுள்ளார்.

பிறப்பு

கார்த்திகேய ஹைதராபாத்-ல் வளர்ந்தவர். அங்கே தனது கல்வியை முடித்த கார்த்திகேயா, சினிமாவை தனது தொழிலாக தேர்ந்தேடுத்தார்.

திரையுலக தொடக்கம்

கார்த்திகேயவின் முதல் திரைப்படமான பிரேமதோ மீ கார்த்திக் என்ற திரைப்படம் தெலுங்கில் 2017 ஆம் ஆண்டு வெளியானது. ஆனால் இப்படம் இவர்க்கு கை கொடுக்கவில்லை. இப்படத்தினை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு வெளியான ஆர்எக்ஸ் 100 திரைப்படம் தெலுங்கு சினிமாவில் பட்டி தொட்டி என தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேஷில் அணைத்து இடங்களிலும் வசூல் சாதனை படைத்து பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது.

ஆர்எக்ஸ் 100 படத்திற்கு பின்னர் கார்த்திகேய தெலுங்கில் ஹிப்பி, குணா 369, கேங் லீடர், 90 எம் எல் என 4 திரைப்படங்களில் 2019 ஆண்டு மட்டும் நடித்துள்ளார். இவர் நடித்த திரைப்படங்கள் தெலுங்கு சினிமாவில் இவரை குறிப்பிடப்படும் ஒரு முக்கிய திரை நட்சத்திரமாக உயர்த்தியுள்ளது.
 
கார்த்திகேய நடித்த ஆர்எக்ஸ் 100 திரைப்படத்திற்காக இவருக்கு 2018 ஆம் ஆண்டின் 'ஜீ சினி அவார்ட்ஸ் தெலுங்கு' சார்பில் சிறந்த அறிமுக நடிகருக்கான விருதும், 2019 ஆம் ஆண்டில் '17த் சந்தோசம் பிலிம் அவார்ட்ஸ்' சார்பில் சிறந்த நடிகருக்கான விருதும் அளித்து கௌரவிக்கப்பட்டது.
 
தமிழ் சினிமா அறிமுகம்

கார்த்திகேய தமிழ் சினிமாவில் 2019 ஆம் ஆண்டு வலிமை திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இவர் வலிமை திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். இவரது தமிழ் அறிமுகம் தமிழ் சினிமாவின் முன்னணி முக்கிய நட்சத்திரம் அஜித் குமார் திரைப்படத்தில் மூலம் அமைந்ததால், இவருக்கு தமிழில் தொடக்கத்திலையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+