கே எஸ் ஜி வெங்கடேஷ் பயோடேட்டா

  கே எஸ் ஜி வெங்கடேஷ் துணை கதாபாத்திரங்களில் தொடர்நது நடித்து திரைத்துறையில் பிரபலமானவர், இவர் தமிழ் மற்றும் மலையாள சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்துள்ளார்.

  திரையுலக அனுபவம் / அறிமுகம்

  கே எஸ் ஜி வெங்கடேஷ் தமிழ் திரையுலகின் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றி பிரபலமானவர், இவர் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும், நடிகருமான கே எஸ் கோபால கிருஷ்ணன் என்பவரின் மகன் ஆவார்.

  இவர் 1989-ம் ஆண்டு "அத்தைமடி மெத்தையடி" திரைப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். பின்னர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்துள்ள இவர், முழு நேர தயாரிப்பாளராக தமிழ் திரையுலகில் பணியாற்றிவந்துள்ளார்.

  2014-ம் ஆண்டு இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் வெளியான 'சசதுரங்க வேட்டை' திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

  2014-ம் ஆண்டிற்கு பின் பல தமிழ் திரைப்படங்களில் பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து பிரபலமாகியுள்ளார்.

  தொலைக்காட்சி அனுபவம் 

  கே எஸ் ஜி வெங்கடேஷ் திரைப்படங்களில் மட்டுமில்லாமல் சின்னத்திரையில் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர் 2017-2018 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றியடைந்த நந்தினி தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

  இதனை தொடர்ந்து 2018ல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பொண்ணுக்கு தங்க மனசு, 2019ல் சன் தொலைக்காட்சியின் ரன் தொடரிலும் நடித்துள்ளார்.