X
லியோன் ஜேம்ஸ்
Music Director/Singer

லியோன் ஜேம்ஸ் பயோடேட்டா

லியோன் ஜேம்ஸ் ( Leon James) என்பவர் ஒரு இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் பாடகர். இவர் முதன்முதலில் இரண்டு பாடல்களை, காஞ்சனா 2 (2015) படத்தில் இசையமைத்தார். அடுத்து கோ 2 (2016) படத்துக்கு இசையமைத்தார்.

லியோன் 4 வயதிலேயே பியானோ வாசிக்கத் தொடங்கிவிட்டார். ரகுமானிடம் ‘வரலாறு’ படத்தில் ‘தொட்டாபுரம் டோய்’, ‘மங்கள் பாண்டே’வில் ஒரு பாடல் குழந்தைகளுள் கோரஸ் பாடியிருக்கிறார். பத்மசேஷாத்ரி பள்ளியில் இவருக்கு இசையமைப்பாளர் அனிருத் மூத்த மாணவர். இவரும் அனிருத்தும் பள்ளிக் காலத்தில் இணைந்து பல இசை பேண்ட்களில் வாசித்திருக்கின்றனர். சன் தொலைக்காட்சியில் 2009இல் ஏ.ஆர்.ரகுமான் நடத்திய ‘ஊ ல ல லா’ இசைப் போட்டியில் ஜேம்ஸ், அனிருத், விவேக், கிஷோர், ஆனந்த் ஆகியோர் சேர்ந்து ‘சிங்க்ஸ்’ என்ற பேண்ட் முலாமாக தங்களுடைய சொந்த இசையமைப்பை மேடை ஏற்றினர். போட்டியில் அனிருத்தும் லியோனும் சிறந்த கீபோர்டிஸ்ட் விருது வென்றனர். அதன்பிறகு, லியோன் முழு நேர கீபோர்ட் கலைஞராக பிரபல இசைக் கலைஞர்களுடன் மேடை நிகழ்ச்சிகளிலும், பாடல் பதிவுகளிலும் வாசித்தார். சந்தோஷ் நாராயணனுக்கு ‘ஜிகர்தண்டா’ உட்பட மூன்று படங்களில் கீபோர்ட் வாசித்திருக்கிறார்.

கீபோர்டிஸ்டைத் தாண்டி தனக்குள் இருக்கும் இசையமைப்பாளரை வெளிக்காட்டவே யூடியூபில் ‘வாயா என் வீரா’ பாடலை வெளியிட்டார். அந்தப் பாடல் இலட்சக்கணக்கானோரைச் சென்றடைந்துள்ளது. பாடலை ரசித்துக் கேட்டவர்களில் ஒருவரான நடிகரும் இயக்குனரான ராகவா லாரன்ஸ் உடனடியாக லியோன் ஜேம்சுக்கு ‘கஞ்சனா-2’ படத்தில் இசையமைக்க வாய்ப்புக் கொடுத்தார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+