Celebs»lijomol Jose»Biography

    லிஜிமோல் ஜோஸ் பயோடேட்டா

    லிஜிமோல் ஜோஸ் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார், இவர் பெரும்பாலும் மலையாள திரைப்படங்களில் நடித்து திரையுலகில் பிரபலமானவர். 2016-ம் ஆண்டு மஹேஷிண்டே பிரதிகாரம் மற்றும் கட்டப்பனையிலே ரிதவிக் ரோஷன் என்ற இரு திரைப்படங்களில் நடித்து மலையாள திரையுலகில் அறிமுகமான இவர், பின்னர் மலையாள திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

    அறிமுகம் 

    மலையாள திரைப்படங்களில் நடித்து திரையுலகில் அறியப்பட்ட இவர் தமிழில் 2019-ம் ஆண்டு பிச்சைக்காரன் திரைப்படத்தினை இயக்கிய இயக்குனர் சசி இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் குமார், சித்தார்த் நடிக்கும் சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.

    தொடக்கம்

    லிஜோமோல் தனது பட்டபடிப்பினை முடித்த பின்னர் ஜெய் ஹிந்த் தொலைக்காட்சியில் பணியாற்றியுள்ளார். பின்னர் அதன் தொடர்பு கொண்டு மஹேஷிண்டே பிரதிகாரம் திரைப்படத்தின் நடிகர்கள் தேர்வில் கலந்து கொண்டு இத்திரைப்படத்தில் நடித்துள்ளார். பின்னர் அதே ஆண்டு இத்திரைப்படத்தினை தொடர்ந்து இவர் நடித்து வெளிவந்த மலையாள திரைப்படமான கட்டப்பனையிலே ரிதவிக் ரோஷன் திரைப்படத்தில் நடித்து பிரபலமாகியுள்ளார்.