ஜெ மகேந்திரன் பயோடேட்டா

  ஜெ மகேந்திரன் இந்திய திரைப்பட நடிகர், இயக்குனர், கதையாசிரியர் என பல முகம் கொண்டு தமிழ் திரையுலகில் பணியாற்றி வந்துள்ளார். இவர் 1966-ம் ஆண்டு "நாம் மூவர்" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதை ஆசிரியராக அறிமுகமானவர். பின்னர் 1978-ம் ஆண்டு ரஜினி நடித்து வெளிவந்த "முள்ளும் மலரும்" திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக மக்கள் முன்னிலையில் பிரபலமானவர்.

  நீண்ட இடைவேளைக்கு பின் 2016-ம் ஆண்டு அட்லீ இயக்கி வெளிவந்த விஜய்-ன் "தெறி" படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் நடிகராகவும் தனது திரை பயணத்தை தொடங்கியுள்ளார். பின்னர் நிமிர், மீஷ்.சந்திரமௌலி, சீதக்காதி, பேட்ட, பூமராங் என பல திரைப்படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
   
  பிறப்பு
  ஜோசப் செல்லையா(ஆசிரியர்) - மனோன்மணி என்பவர்களுக்கு 1939, ஜூலை 25-ல் மகனாக பிறந்த இவர், இளையான்குடியில் தனது பள்ளி கல்வியினை முடித்த இவர், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டபடிப்பினை கற்றுள்ளார், பின்னர் அழகப்பா கல்லுரியில் வர்த்தகரீதியான படிப்பினை கற்றுள்ளார். 

  இவர் இவரது கல்லூரி பருவத்தில் எம்.ஜி.ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) சிறப்பு விருதினராக பங்குபெற்று மேடையில் கலந்துரை ஆற்றியுள்ளார். அப்போது மேடையில் சிறப்பு விருதினருக்கு தொகுப்பாளராக இருந்த மஹேந்திரன் எம்.ஜி.ஆரின் கலந்துரையாடலுக்கு பிறகு திரையுலகில் ஆர்வமிக்கவராக திகழ்தார்.

  திரையுலக வாழ்க்கை
  இவர் இவரின் மேற்படிப்புக்கு பின் சென்னை சட்டக்கல்லூரியில் சேர்ந்துள்ளார். குடும்ப நெருக்கடி காரணமாக 7 மாதங்களில் வீட்டிற்கு திரும்பிய இவர், பத்திரிகையாளராக தன் வாழ்க்கை பயணத்தை தொடங்கியுள்ளார். 

  பின்னர் சென்னையில் எம்.ஜி.ஆர்-யை சந்தித்து "பொன்னியின் செல்வன்" நாடகத்திற்கு திரைக்கதை ஆசிரியராக பணியாற்றியுள்ளார். பின்னர் வாழ்வே வா, காஞ்சித்தலைவன் போன்ற திரைப்படங்களில் பின்னணி கதையாசியராக பணியாற்றி வந்துள்ளார். பின்னர் "நாம் மூவர்" திரைப்படத்திற்கு கதையாசிரியராக 1966-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் இவரை திரையுலகிற்கு அறிமுகம் செய்துள்ளார்.

  இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சபாஷ் தம்பி, பணக்கார பிள்ளை, நிரக்குடம்  போன்ற திரைப்படங்களில் பணியாற்றிய இவர், ரஜினியின் முள்ளும் மலரும் திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்த இவர் ஊதிர்ப்பூக்கள், ஜானி என பல வெற்றி திரைப்படங்களை இயக்கி தமிழ் திரையுலகில் பிரபலமாகியுள்ளார்.

  2006-ம் ஆண்டு சாசனம் திரையப்படத்திற்கு இயக்குனராகவும், திரைக்கதை மற்றும் வசன இயக்குனராக பணியாற்றிய இவர் நீண்ட இடைவேளைக்கு பின் நடிகராக 2016-ம் ஆண்டு அட்லீ இயக்கி விஜய் நடித்த தெறி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார். 

  உடல்நலக்குறைவால் சென்னை அப்பொல்லா மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட இவர் சிகிச்சை பலனின்றி 2019-ம் ஆண்டு ஏப்ரல் 2-ல் காலமானார்.