நந்திதா ஜெனிபர் பயோடேட்டா

    நந்திதா ஜெனிபர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 2000-ம் ஆண்டில் அர்ஜுன் நடித்த ரிதம் திரைப்படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர். பின்னர் "முத்தம்" திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து திரையுலகில் பிரபலமானவர்.

    இவர் இமைசை அரசன் 23-ம் புலிகேசி, அறிந்தும் அறியாமலும் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார், மேலும் 2003-ம் ஆண்டு "ஈரநிலம்" திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படமானது 2003-ம் ஆண்டு சிறந்த திரைபடமென புகழ்பெற்றது.

    இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்களிலும் புவனேஸ்வரி, நாகவல்லி, 2019-ம் ஆண்டு லட்சுமி ஸ்டோர்ஸ் என்னும் சன் தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துள்ளார்.