twitter
    Celebs»Nithish Veera»Biography

    நிதிஸ் வீரா பயோடேட்டா

    நிதிஸ் வீரா - தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர். இவர் நாயகனின் நண்பன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரைப்பட ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளார். இயக்குனர் செல்வராகவனின் 'புதுப்பேட்டை', இயக்குனர் வெற்றிமாறனின் 'அசுரன்' திரைப்படம் இவர்க்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பினை பெற்று தந்துள்ளது.

    தமிழ் சினிமாவில் நிதிஸ் வீரா-வுக்கு ஒரு அடையாளத்தினை பெற்று தந்த திரைப்படங்கள்

    புதுப்பேட்டை
    வெண்ணிலா கபடி குழு
    காலா
    அசுரன் 


    திரைப்பயணம்

    நிதிஸ் வீரா தமிழ் சினிமாவுக்கு கூத்து பட்டறை மூலம் பயிர்ச்சி பெற்று அறிமுகமானவர். இவர் 2000ஆம் ஆண்டு விஜயகாந்த நடித்த 'வல்லரசு' திரைப்படத்தில் யாரும் அடையாளம் காண முடியாத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பின்னர் 2006 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'புதுப்பேட்டை' திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த திரைப்படம் விமர்சனம் ரீதியாக இன்றும் பேசப்படுகிறது. இப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் இவர்க்கு ஒரு அடையாளமாக மாறி உள்ளது.

    இப்படத்திற்கு பின்னர் நிதிஸ் வீரா, பல தமிழ் திரைப்படங்கள் நடித்திருந்தாலும் வெண்ணிலா கபடி குழு, அசுரன், காலா என முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நல்ல கதாபாத்திரங்கள் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமாகியுள்ளார். இவர் பா.ரஞ்சித் இயக்கிய காலா படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்துள்ளார்.
     
    இறப்பு

    2021 மே 17ல் கொரோன நோய் பரவளில் தாக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.