நிவேதா தாமஸ் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி சின்னத்திரையில் பிரபலமானவர். பின்னர் வெள்ளித்திரையில் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ் பெற்றவர். தற்போது இவர் நாயகியாக தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
பிறப்பு / திரையுலக தொடக்கம்
1995ல் நவம்பர் 2ம் தேதியில் கேரள மாநிலத்தை சார்ந்த மலையாள குடும்பத்தில் பிறந்துள்ள இவர், தனது சிறு வயதில் இருந்து திரையுலகத்தில் மேல் ஆர்வம் கொண்டு திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட "ராஜா ராஜேஸ்வரி" என்னும் தொடரில் கௌரி கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார், இதனை தொடர்ந்து இவர், 2004 - 2007-ம் ஆண்டுகளில் சன் தொலைக்காட்சியில் குழந்தைகளுக்கென பிரத்யேகமாக உருவாக்க பட்ட "மை டியர் பூதம்" என்னும் நெடுந்தொடரில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமாகியுள்ளார்.
தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் உருவாக்கப்பட்ட இத்தொடர்களில் நடித்து புகழ் பெற்ற இவர், 2008ம் ஆண்டு மலையாள திரையுலகில் நடிகர் ஜெய் ராம், கோபிகா நடித்து பிரபலமான 'வெருதே ஒரு பார்யா' என்ற மலையாள திரைப்படத்தில் இவர்களுக்கு மகளாக நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமாகியுள்ளார்.
திரையுலக அனுபவம்
சின்னத்திரையில் இவர் பெற்ற புகழினை கொண்டு வெள்ளித்திரையில் அறிமுகமான இவர், 2008-ம் ஆண்டு மலையாள படத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமாகியுள்ளார். பின்னர் அதே ஆண்டு தமிழில் "குருவி" படத்தில் விஜய்யின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் குருவி படத்தில் விஜயுடன் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்து இருப்பார். இப்படத்தினை தொடர்ந்து இவர், பல மலையாள மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்துள்ள இவர், ஒரு அழுத்தமான கதாபாத்திரம் இல்லாததால் திரையுலகில் இவர் ஜொலிக்கவில்லை.
சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான "போராளி" படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர், இப்படத்தினை தொடர்ந்து 2013-ம் ஆண்டு தமிழில் வெளியான "நவீன சரஸ்வதி சபதம்" திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து இவர், பாபநாசம், ஜில்லா என தமிழ் முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ள இவர், 2016ம் ஆண்டு ஜென்டில் மேன் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நாயகியாக நடித்து தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்து தெலுங்கில் முன்னணி நடிகையாக புகழ் பெற்றுள்ளார்.
தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பிரபல முன்னனி நடிகையாக நடித்து வரும் இவர், இணையதள பக்கங்களில் அவ்வப்போது போட்டோ சூட் செய்து கொண்டு வருகிறார்.
அங்கீகாரம்
- குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான இவர், 2008-ம் ஆண்டு கேரளா அரசால் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதினை பெற்று கெளரவிக்கப்பட்டார்.
- 2017-ம் ஆண்டு தெலுங்கு திரையுலகம் "ஜென்டில் மேன்" படத்தில் நடித்தற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருதினை வழங்கி பெருமை படுத்தியது.
- 2018-ம் ஆண்டின் சிறந்த திரையுலக பங்களிப்பாளர் என விருதினை வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது