twitter
    Celebs»Pratap K Pothen»Biography

    பிரதாப் கே போத்தன் பயோடேட்டா

    பிரதாப் கே போத்தன் இந்திய திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகம் கொண்டு தமிழ் மற்றும் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றி வந்துள்ள புகழ் பெற்ற பிரபலம் ஆவார். இவர் இதுவரை 100-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து, பல விருதுகளை வென்றுள்ளார்.

    பிறப்பு

    பிரதாப் போத்தன், 1952ல் கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் பிறந்துள்ளார். பிறப்பால் ஒரு தொழிலதிபர் குடும்பத்தில் பிறந்த இவர், கலையின் மேல் ஆர்வம் கொண்டு திரையுலகிற்கு வருகை தந்துள்ளார்.

    இவரது சகோதரர், ஹரி போத்தன் பல திரைப்படங்களை தயாரித்து உள்ளார்.

    திருமணம்

    நடிகர் - தயாரிப்பாளர் - இயக்குனர் என பன்முகம் கொண்டு பணியாற்றி வந்துள்ள, பிரதாப் 1985ல் நடிகர் எம். ஆர் ராதா மகளும், ராதா ரவியின் தங்கையுமான ராதிகாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் இவர்கள் 1986ல் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுள்ளனர்.

    ராதிகாவுக்கு பின், பிரதாப் போத்தன் அமலா சத்யநாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கேய என்ற பெண் 1991ல் பிறந்துள்ளது. அமலா சத்யநாத் - பிரதாப் இருவரும் 2012ல் ஆண்டு விவாகரத்து பெற்றுள்ளனர்.

    திரையுலக தொடக்கம்

    எழுத்தாளராக இருந்த பிரதாப் போத்தன் கலை நிகழ்ச்சியின் மேல் உள்ள ஆர்வத்தால் தனது பணியை விடுத்து சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். தொடக்கத்தில் மேடை நாடகங்களில் நடித்து வந்துள்ள இவர், பின்னர் ஆரவம் என்ற மலையாள படத்தில் நடித்து 1978ல் திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார்.

    1979ல் பிரதாப் போத்தன் தகரா என்ற மலையாள படத்தில் நடித்து பல விருதுகளை வென்றார். அதே ஆண்டு தமிழ் சினிமாவில் இயக்குனர் பாலு மகேந்திர இயக்கிய 'அழியாத கோலங்கள்' படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பலரின் கவனத்தை கவர்ந்துள்ளார்.

    பிரபலம்

    தமிழ் - மலையாளம் என இரு மொழிகளில் அடுத்தடுத்து பல வெற்றி படங்களை நடித்து வந்துள்ள இவர் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுகளை வென்று அசத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் அழியாத கோலங்கள், மூடு பனி, வறுமையின் நிறம் சிவப்பு என இவர் நடித்த அடுத்தடுத்த படங்கள் இவரை ஒரு முக்கிய நடிகராக பிரபலமாக்கியுள்ளது.

    பிரதாப் போத்தன், நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராக மீண்டும் ஒரு காதல் கதை, சீவலப்பேரி பாண்டி, வெற்றி விழா என பல வெற்றி படங்களை இயக்கியும், எழுத்தாளராக பணியாற்றியும் அசத்தியுள்ளார்.
     
    பிரதாப் கே போத்தன் இயக்கிய சிறந்த 5 தமிழ் படங்கள்

    • மீண்டும் ஒரு காதல் கதை
    • மை டியர் மார்த்தாண்டம்
    • லக்கி மேன்
    • வெற்றி விழா
    • சீவலப்பேரி பாண்டி
     
    இறப்பு

    பிரதாப் கே போத்தன், 2022 ஜூலை 15ல் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை ஏய்தினார்.