ப்ரீத்தா விஜயகுமார் பயோடேட்டா

    பிரீத்தா விஜயகுமார் தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். இவர் பிரபல தமிழ்த் திரைப்பட நடிகரான விஜயகுமாரின் மகள் மற்றும் இயக்குனர் ஹரியின் மனைவியும் ஆவார்.

    விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளா விஜயகுமார் ஆகியோருக்கு மகளாக பிறந்தவர். இவருக்கு வனிதா, ஸ்ரீதேவி விஜயகுமார் என்ற சகோதரிகளும் அருண் விஜய் என்ற சகோதரனும் உள்ளனர்.

    இவர் 1998-ம் ஆண்டு "சந்திப்போமா" திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். இவர் "படையப்பா" திரைபடத்தில் ரஜினியின் மகளாக நடித்து பிரபலமானவர்.