Celebs » Ram » Biography
பயோடேட்டா
ராம சுப்ரமணியம் (எ) ராம் ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர். இவர் சென்னை கிறித்துவ கல்லூரியில் தமிழ் முதுகலைப் பட்டம் பெற்றவர். பின்பு இயக்குனர் தங்கர் பச்சான் அவர்களின் சில படங்களில் உதவி இயக்குனராக பணி செய்துள்ளார். அது மட்டும் இன்றி ராஜ்குமார் சந்தோஷி மற்றும் கோவிந்த் நிஹிலானி போன்ற இந்தி திரைப்பட இயக்குனர்களிடமும் உதவி இயக்குனராக பணி செய்துள்ளார். 2007ம் ஆண்டு வெளியான இவரின் முதல் படைப்பான கற்றது தமிழ் நல்ல விமரிசனத்தைப் பெற்றாலும் வசூலில் வெற்றி பெறவில்லை அத்திரைப்படம் ஜீவாவிற்கும் அஞ்சலிக்கும் குறிப்பிடத்தக்க பெயரைப் பெற்றுக் கொடுத்தது.

2013 இல் , இவர் கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில் , இயக்கிய தங்க மீன்கள் என்ற படம் வெளியானது.இந்திய சர்வதேச திரைப்பட விழா மற்றும் குழந்தைகளுக்கான சர்வதேச திரைப்பட விழாக்களில் 'தங்க மீன்கள்' திரைப்படம் திரையிடப்படவுள்ளது.