twitter
    Celebs»Rasu Mathuravan»Biography

    ராசு மதுரவன் பயோடேட்டா

    ராசு மதுரவன் இந்திய தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நிலக்கோட்டை அருகிலுள்ள அணைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். இவர் திரைத்துறையில் இயக்குனரும், நடிகருமான மணிவண்ணனிடம் துணை இயக்குனராக பணியாற்றியவர். இவர் இயக்குனராக 1999-ம் ஆண்டு பூமகள் ஊர்வலம் என்ற திரைப்படத்தினை இயக்கி அறிமுகமாகியுள்ளார்.

    இத்திரைப்படத்தினை தொடர்ந்து 9 ஆண்டுகளுக்கு பின்னர் இவர் 2008-ம் ஆண்டு பாண்டி திரைப்படத்தினை இயக்கி தமிழ் திரையுலகில் பிரபலமானவர். இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக என சில குடும்ப வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

    இறப்பு
    இவருக்கு இருக்கும் புகையிலை பழக்கம் காரணமாக 2013-ம் ஆண்டு தொண்டை புற்றுநோய் ஏற்பட்டு ஜூலை 8ல் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.