twitter
    Celebs»Resul Pookutty»Biography

    ரேஸுல் பூக்குட்டி பயோடேட்டா

    ரெசுல் பூக்குட்டி இந்தியத் திரைப்பட ஒலி வடிவமைப்பாளர், ஒலித் தொகுப்பாளர் மற்றும் ஒலிக்கலவை கலைஞர் ஆவார். சிலம்டாக் மில்லியனயர் திரைப்படத்தில் ஒலிக்கலவை கலைஞராக பணியாற்றியதற்காக ரிச்சர்டு பிரைக் மற்றும் இயன் டப் ஆகியோருடன் இணைந்து அகாதமி விருது பெற்றார். இவர் ஹாலிவுட், பாலிவுட்,தமிழகத் திரைப்படத்துறை, மற்றும் மலையாளத் திரைப்படத் துறை போன்றவற்றில் பணிபுரிந்துள்ளார்.

    ரேஸுல் பூக்குட்டி 2004-ம் ஆண்டு "முஸாபிர்" திரைப்படத்தில் பணியாற்றி திரையுலகில் அறிமுகமான இவர், 2010-ம் ஆண்டு "எந்திரன்" திரைப்படத்தில் பணியாற்றி தமிழில் அறிமுகமாகியுள்ளார்.
     
    கேரளாவின் கொல்லம் நகரத்தில் இருந்து சுமார் 58 கிமீ தொலைவில் உள்ள அஞ்சல் என்னும் பகுதியின் விளாக்குபரா என்ற ஊரில் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தார். வறுமையான குடும்பத்தில் எட்டாவது குழந்தையாக பிறந்தார். இவரது தந்தை ஒரு தனியார் பேருந்து நிறுவனத்தில் பயணச்சீட்டு பரிசோதகராய் இருந்தார். பள்ளிக்கூடத்திற்கு 6 கிலோமீட்டர் நடந்து சென்று பள்ளிப்படிப்பை மேற்கொண்டார். மேலும் இவர் பயின்ற காலத்தில் இவரின் ஊருக்கு மின்சார வசதி இல்லாததால் மண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் பயின்றார்.

    காயம்குளத்தில் உள்ள எம் எஸ் எம் கல்லூரியில் 1987-1990 ஆம் ஆண்டுகளில் இயற்பியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். மேலும் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். 1995 ஆம் ஆண்டில் புனேவில் உள்ள இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் பட்டம் பெற்றார். சட்டம் பயில்வது தனது தந்தையின் விருப்பமாக இருந்ததாகத் தெரிவித்தார். பூக்குட்டியின் மனைவியின் பெயர் ஷாதியா. இவருக்கு ரயான் என்கிற ஒரு மகனும் சல்னா என்னும் ஒரு மகளும் உள்ளனர்.