X
சஞ்சனா நடராஜன்
Actress

சஞ்சனா நடராஜன் பயோடேட்டா

சஞ்சனா நடராஜன், தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் உருவான பல படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து திரையுலகில் ஒரு முன்னணி நடிகையாக பிரபலமானவர். இவர் 2014ம் ஆண்டு வெளியான 'நெருங்கிவா முத்தமிட' படத்தில் நாயகியின் தோழி கதாபாத்திரத்தில் நடித்து முதன் முதலில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.

 

சஞ்சனா நடராஜன் நடித்த தமிழ் படங்களின் தொகுப்பு

 

இணையத்தில் பிரபலமான சஞ்சனா நடராஜன் அழகிய புகைப்படங்கள்

 

திரைப்பயணம்

 

சஞ்சனா நடராஜன், சென் னையில் பிறந்து நடிப்பு மற்றும் திரையுலகில் ஆர்வம் கொண்டு பல்வேறு முயற்சிகள் எடுத்து தற்போது பல ரசிகர்களை கொண்டுள்ள நடிகை ஆவார். இவர் சென்னை பிரபல கலைக்கல்லூரியில் கல்வி பயின்று மாடெல்லிங் மற்றும் தொகுப்பாளர் என பல பணிகள் செய்து அனைவராலும் அறியப்படும் நட்சத்திரமாக திரையுலகில் உள்ளார்.


சஞ்சனா நடராஜன், ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'தமிழ் பேசும் கதாநாயகி' என்ற நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபெற்று முதல் இடத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பல மாடெல்லிங் மற்றும் திரையுலக சார்ந்த நடக்கும் பல நிகழ்ச்சிகளில் பங்குபெற்று தமிழ் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பினை பெற்றுள்ளார்.


2014ம் ஆண்டு வெளியான 'நெருங்கி வா முத்தமிட' திரைப்படத்தில் நாயகியான பியாவின் தோழியாக நடித்து இவர் முதல் முதலில் தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார். பின்னர் மாதவன் நடிப்பில் உருவான 'இறுதிச்சுற்று' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் ஒரு அங்கீகாரத்தினை பெற்றுள்ளார். இப்படம் பின்பு தெலுங்கில் மற்றும் ஹிந்தி மொழியில் ரீமேக் செய்யப்பட்ட நிலையில் இவர் அதே கதாபாத்திரத்தில் நடித்து தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகிலும் அறிமுகமாகி புகழ் பெற்றார்.


இப்படங்களை தொடர்ந்து இவர் தெலுங்கு, தமிழ் என பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலக ரசிகர்களால் அறியப்படும் ஒரு முக்கிய நடிகையாக புகழ் பெற்றுள்ளார்.


தற்போது 2.0, நோட்டா, ஜகமே தந்திரம் போன்ற முண்ணனி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமாகியுள்ள இவர், இணையத்தில் தணிக்கை சான்றிதழில் வெளியாகும் வெப் சீரிஸ் என்ற படங்களிலும் நடித்து வருகிறார். இவர் 2017ம் ஆண்டு நடித்த "அஷ் 'ம் ஸபரிங் ஃப்ரம் காதல்" என்ற ஒரு இணையதள படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+