twitter
    Celebs»Sangeetha Krish»Biography

    சங்கீதா க்ரிஷ் பயோடேட்டா

    சங்கீதா கிரிஷ் ஓர் இந்திய நடிகையும் வடிவழகியும் பின்னணிப்பாடகியும் ஆவார். இவர் 90களின் இடைப்பகுதியில் நடிப்புத்துறையினுள் நுழைந்தார். உயிர், பிதாமகன், தனம் போன்ற திரைப்படங்களில் நடித்தமைக்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எ.ஆர்.ரகுமானுடனும் பணிபுரிந்திருக்கிறார்.

    சங்கீதா சென்னையில் பிறந்தவர். இவரது பெற்றோர் அரவிந்த், பானுமதி. சங்கீதாவின் பாட்டனார் கே. ஆர் பாலன் திரைப்படத் தயாரிப்பாளர், 20க்கு மேற்பட்ட தமிழ்ப்படங்களை தயாரித்திருக்கிறார். இவரின் தந்தையும் பல படங்களை தயாரித்திருக்கிறார். இவருக்கு இரு சகோதரர்கள் உள்ளனர். சங்கீதா ஓர் பரதநாட்டியக்கலைஞர். பரதத்தை தனது பள்ளிக்காலத்தில் பயின்றார். இவர் பெசன்ட் நகர் சென் ஜேன்சு பள்ளியில் படித்தார்.

    90களின் கடைசியில் நடிப்புத்தொழிலை தொடங்கினார். ஆரம்பத்தில் குறைந்த முதலீட்டு திரைப்படங்களில் நடித்தார், இவர் விக்ரம், சூரியாவுடன் இணைந்து நடித்த பிதாமகன் திரைப்படம் தேசிய விருது பெற்றது. மாதவனுடன் இணைந்து எவனோ ஒருவன் திரைப்படத்தில் நடித்தார்.

    2009 ஆம் ஆண்டு, பிப்ரவரி முதலாம் தேதி அன்று திருவண்ணாமலைக் கோவிலில், தமிழ்ப் பின்னணிப் பாடகரான கிரிஷை சங்கீதா திருமணம் செய்துகொண்டார்.