twitter
    Celebs»Shalini Pandey»Biography

    ஷாலினி பண்டே பயோடேட்டா

    ஷாலினி பாண்டே இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் திரையுலகில் 2017-ம் ஆண்டு அர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர். இத்திரைப்படத்தின் மூலம் இந்திய திரையுலகில் பிரபலமான இவர் ஹிந்தி, தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் பிரபலமாக நடித்து வருகிறார்.

    பிரபலம் / அறிமுகம்

    இவரது நடிப்பில் 2017-ம் ஆண்டு வெளிவந்த அர்ஜுன் ரெட்டி திரைப்பத்தின் வெற்றியின் மூலம் திரையுல ரசிகர்களை கவர்ந்த இவர், இத்திரைப்படத்தினை தொடர்ந்து 2018-ம் ஆண்டு மெரி நிம்மோ என்ற ஹிந்தி திரைப்படத்திலும், நடிகை சாவித்திரி-யின் வாழ்க்கை படமான மகாநதி (தெலுங்கு), நடிகையர் திலகம் (தமிழ்) என்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

    இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி மேன் மெய்ன் ஹாய் விஸ்ஸ்வஸ், கிரைம் பெட்ரோல் என்ற சோனி தெலுங்கு தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார். 

    2017-ம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களை கவர்ந்த இவர், 2019-ம் ஆண்டு தமிழில் 100% காதல், கொரில்லா, அக்னி சிறகுகள் என மூன்று திரைப்படங்களில் நடித்துள்ளார்.