X
ஸ்ரேயா சரன்
Actress

ஸ்ரேயா சரன் பயோடேட்டா

ஷ்ரேயா சரன் இந்திய திரையுலகில் பிரபலமாக அறியப்படும் நடிகை. இவர் 2001-ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானவர். இவர் பல தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார்.

பிறப்பு

ஷ்ரேயா சரன் 1982-ல் வடஇந்தியாவில் உள்ள ஹரித்வார் நகரத்தில் பிறந்துள்ளார். இவரது தந்தை பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். டெல்லி மற்றும் மும்பையில் தந்து படிப்பினை முடித்துள்ள இவர், திரைத்துறையின் மேல் ஆர்வம் கொண்டு திரைத்துறைக்குள் நடிக்க வந்துள்ளார்.
 
ஷ்ரேயா சரன் தமிழில் நடித்த திரைப்படங்கள் மற்றும் புகைப்படங்களுக்கு
 
திரையுலக தொடக்கம்

ஷ்ரேயா சரன் டெல்லியில் தனது இளங்கலை பட்ட படிப்பின் போது, ஒரு வீடியோ ஷூட்டில் கலந்துகொண்டுள்ளார். அந்த வீடியோவில் இவரின் நடனம் பிரபலமானதை தொடர்ந்து, இவர் தெலுங்கு திரைப்படத்தில் நடிப்பதற்காக 2001-ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து இவர் 2001-ல் இஷ்டம் திரைப்படத்தில் நடித்து தெலுங்கு திரையில் அறிமுகமாகியுள்ளார்.

தொடர்ந்து தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்துள்ள இவர், ஹிந்தி திரைப்படத்திலும் 2003-ஆம் ஆண்டு நடித்து அறிமுகமாகியுள்ளார். இவர் 2003-ஆம் ஆண்டு தமிழில் எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிலும் அறிமுகமாகியுள்ளார்.

ஷ்ரேயா சரன் 2005-ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடித்த மழை திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் நாயகியாக நடிக்க தொடங்கியுள்ளார். இதனை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் கைகோர்த்து பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக பிரபலமானவர்.

பிரபலம்

ஷ்ரேயா சரன் தமிழில் 2007-ஆம் ஆண்டு ரஜினி-யின் சிவாஜி திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழில் முன்னணி நடிகைகளுள் ஒருவனானார்.

இவர் இந்திய திரைப்படங்களில் மட்டுமில்லாமல் ஆங்கிலேய திரைப்படங்களிலும் நடித்துள்ளார், இவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்திற்காக பல விருதுகளையும் வென்றுள்ளார்.




ஸ்பாட்லைட் பிரபலங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+