twitter
    Celebs»Simran Bagga»Biography

    சிம்ரன் பயோடேட்டா

    சிம்ரன் (ரிஷிபாமா) என்ற இயற்பெயர் கொண்ட இவர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் மும்பையில் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர். தூர்தர்ஷனின் மெட்ரோ சானலில் சூப்பர் ஹிட் முகாபுலா என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதன் மூலம் இந்தி திரையுலகில் நுழைந்தார். 1995-இல் இவரது முதல் படம் "சனம் ஹர்ஜாய்" தோல்விப் படமாக அமைந்தது. 1996 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியான "தேரே மேரே சப்னே" இவரது முதல் வெற்றிப் படமாகும்.
     
    இதற்கிடையில் மலையாளத்தில் மம்முட்டியுடன் "இந்திரபிரஸ்தம்", கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் "சிம்ஹடா மாரி" படத்திலும் "அப்பாய் காரி பெல்லி" என்ற தெலுங்குப் படத்திலும் நடித்தார். இவற்றுக்குப் பிறகு 1997 ஆம் ஆண்டு "ஒன்ஸ்மோர்" திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

    தமிழ் திரைப்படங்களில் 2000ஆம் ஆண்டு மிக அதிக சம்பளம் (75 இலட்சத்திற்கும் மேல்) வாங்கியவர் ஆவார். சிம்ரன் நடித்த "கோவில்பட்டி வீரலட்சுமி"- (2003) மற்றும் "துள்ளாத மனமும் துள்ளும்" என்ற திரைப்படமும் பல விருதுகளை பெற்று தந்தன. இவர் தன் சிறுவயது நண்பரான தீபக் பாகாவைத் திருமணம் செய்துகொண்டார்.

    இவர் 1997-ம் ஆண்டு பிலிம்பேர் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதினை "வி.ஐ.பி" மற்றும் "ஒன்ஸ்மோர்" திரைப்படத்திற்காக வென்றுள்ளார். 1999-ம் ஆண்டு தமிழகத்தின் சிறந்த நடிகைக்கான விருதத்தினை "துள்ளாத மனமும் துள்ளும்" திரைப்படத்திற்காக பெற்றுள்ளார். பின்னர் அதே ஆண்டு "வாலி" திரைப்படத்திற்காக சினிமா எக்ஸ்பிரஸ் விருதினை பெற்று, 1999-ம் ஆண்டின் பிலிம்பேர் சிறந்த நடிகைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

    தற்போது இவர் தமிழ் திரையுலகில் மட்டும் 10 விருதுகளை வென்றுள்ளார். அதில் 4 பிலிம்பேர் விருதுகள் குறிப்பிடத்தக்கது. மேலும் 9 பிலிம்பேர் விருதிணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
     
    சிம்ரன் மும்பையில் பிறந்தார். இவர் பஞ்சாபி, ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளை சரளமாக பேசுவார். மேலும், இவர் பரதநாட்டியம், சாலசா நடனரும் ஆவார். இவர் தீபக் பாகா என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு அதீப் மற்றும் ஆதித் என்ற இரு மகன்கள் உள்ளனர். தற்போது இவர் திரைப்படங்களில் குணசித்திர கதாப்பாத்திரத்திலும் தொலைக்காட்சி நிகழ்சிகளிலும் நடித்து வருகிறார்.