சோனம் கபூர் பயோடேட்டா

    சோனம் கபூர் இந்தி திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்திய நடிகையாவார்.

    சோனம் கபூர் அனில் கபூர் மற்றும் சுனிதா கபூரின் மகளாவார், சினிமா தயாரிப்பாளராக இருந்த சுரீந்தர் கபூரின் பேத்தி. தயாரிப்பாளர் போனி கபூர், நடிகர் சஞ்சய் கபூர் மற்றும் சந்தீப் மார்வாவின் சகோதரன் மகள். சோனம் கபூர் தான் மூன்று குழந்தைகளில் மூத்தவர். சகோதரி ரியா மற்றும் சகோதரர் ஹர்ஷவர்தன் ஆகியோர் மற்ற இருவர்.

    கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தில் இவர் படித்தார், பின் தனது சர்வதேச இளங்கலை படிப்பை மேற்கொள்ள தென்கிழக்கு ஆசியாவின் ஐக்கிய உலக கல்லூரியில் பதிவு செய்தார். பின்னர் மும்பை பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொருளாதாரத்தை பிரதானப் பாடங்களாக எடுத்துப் பயின்று பட்டம் பெற்றார். ஆங்கிலம், ஹிந்தி மற்றும் பஞ்சாபி இவருக்கு சரளமாய் வரும். மரபு இந்திய மற்றும் லத்தீன் நடனங்களில் இவர் பயிற்சி பெற்றிருக்கிறார். ஏராளமான குறும்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார், சுமார் பத்தாக இருக்கலாம்.

    ஒரு நடிகையாக தொழில் வாழ்க்கையை துவங்கும் முன்னதாக, சோனம் கபூர் சஞ்சய் லீலா பன்சாலியிடம் உதவியாளராகப் பணியாற்றினார், அவர் இயக்கிய பிளாக் (2005) திரைப்படத்தில் அவருக்கு உதவியாகப் பணியாற்றியிருக்கிறார். பன்சாலியின் சாவரியா (2007) திரைப்படத்தில் புதுமுக நடிகரான ரன்பீர் கபீருடன் இவரும் நடிப்புலகுக்கு அறிமுகமானார், இத்திரைப்படம் வர்த்தக ரீதியாக வெற்றி பெறாமல் போனது. அநேக விமர்சகர்களிடம் இருந்து நல்ல விமர்சனத்தை அவரது நடிப்பு பெற்றது.

    2009 ஆம் ஆண்டில், ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ராவின் டெல்லி-6 படத்தில் அபிஷேக் பச்சன் உடன் சோனம் நடித்தார். இந்த படம் விமர்சகர்களிடம் இருந்து வெவ்வேறு வகையான விமர்சனங்களைப் பெற்றது, என்றாலும் அவரது நடிப்பு வெகுவாகப் புகழப்பட்டது. விமர்சகர் ராஜீவ் மசந்த்தின் விமர்சனம் சொல்லியது: "சோனம் கபூர் டெல்லி 6 இல் அற்புதமாக நடித்துள்ளார். வழக்கமான கதாநாயகி பாத்திரமாகவே இல்லாத ஒன்றில் அவர் சரவெடியாக, உள்ளுணர்வுடன், கேமரா பயமின்றி நடித்துள்ளார்". சமீபத்தில் டேவிட் தவானின் நகைச்சுவைத் திரைப்படமான கம் ஆன் பப்பு வில் நடிக்க சோனம் கபூர் ஒப்பந்தமாகியுள்ளார், இதில் அவர் அக்‌ஷய் குமார் ஜோடியாக நடிக்கிறார்.