X
சுதா கொங்கர பிரசாத்
Director

சுதா கொங்கர பிரசாத் பயோடேட்டா

சுதா கொங்கர பிரசாத் இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2010-ம் ஆண்டு "துரோகி" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகிற்குள் அறிமுகமானவர்.

சுதா கொங்கர பிரசாத் 1971-ம் ஆண்டு மார்ச் 29-ல் பிறந்துள்ளார். இவரது தந்தையின் பூர்விகம் ஆந்திர மாநிலமும், தாயார் தமிழ் நாட்டை சேர்ந்தவராவார். இவர் கிறிஸ்துவ மகளிர் கல்லூரியில் கல்வி பயின்றுள்ளார்.

2002-ம் ஆண்டு இந்திய ஆங்கில படமான "மை பிரெண்ட்" திரைப்படத்திற்கு திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றியுள்ளார். பின்னர் 2010-ம் ஆண்டு தமிழில் ஸ்ரீகாந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடித்த துரோகி திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார்.

நீண்ட இடைவேளைக்கு பின் 2016-ம் ஆண்டு தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் மாதவன் நடித்த "இறுதிச்சுற்று" திரைப்படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 2017-ம் ஆண்டு "குரு" என்ற தலைப்பில் இப்படத்தினை தெலுங்கில் ரீமேக் செய்துள்ளார்.

இறுதிச்சுற்று படத்தின் வெற்றியின் மூலம் தமிழில் முன்னணி இயக்குனராக கருதப்படுகிறார். 

இவர் நடிகர் சூர்யா தயாரித்து நடிக்கும் சூர்யாவின் 38-வது  திரைப்படத்தினை இயக்கவுள்ளார். இத்திரைப்படத்திற்கு  இசையமைப்பாளராக ஜி வி பிரகாஷ் குமார் பணியாற்றவுள்ளார். 

ஸ்பாட்லைட் பிரபலங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+