சுஹாஷினி பயோடேட்டா

    சுஹாசினி ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை, தயாரிப்பாளர், இயக்குனர் ஆவார். தற்போது இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். சுஹாசினி நடித்த என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, பாலைவனச்சோலை, சிந்து பைரவி ஆகிய திரைப்படங்கள் திருப்புமுனையாக அமைந்தது. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், இந்திரா திரைப்படத்தை இயக்கி உள்ளார். இவர் 1988-ல் இயக்குனர் மணிரத்தினத்தை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இயக்குனர் மணிரத்தினத்தின் ராவணன் படத்தில் வசனம் எழுதினார்.