X
சுஜாதா மோகன்
Singer

சுஜாதா மோகன் பயோடேட்டா

சுஜாதா மோகன் இந்திய திரைப்பட பின்னணி பாடகர் ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ் மற்றும் மலையாள திரைப்பட பாடல்களை பாடி பிரபலமானவர். மேலும் தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களிலும் பாடல்களை பாடி பணியாற்றியுள்ளார்.

கேரளா மாநிலத்தில் திருவனந்தபுரத்தில் பிறந்த இவர் பரூர்.டி.கே நாராயண பிள்ளை (கேரளா மாநிலத்தின் முதன் முதலமைச்சர் ஆவார்) இவரின் பேத்தி ஆவார். 1981-ல் டர்.கிருஷ்ணா மோகன் அவர்களை திருமணம் செய்துள்ளார்.

சுஜாதா மோகன் தனது பள்ளி பருவத்திலிருந்தே கே.ஜே.யேசுதாஸ்-யின் மேடை கச்சேரியில் பின்னணி பாடகராக பாடிவந்துள்ளார். இவர் ஆறாம் வகுப்பு படிக்கும் போது எம்.கே அர்ஜுனன் இசையில் "கண்ணெழுட்டி போட்டுத்தொட்டு" என்னும் மலையாள பாடலை தனது திரைப்பயணத்தில் முதல் பாடலாக பாடியுள்ளார்.

இவர் 1977-ம் ஆண்டு "கவிக்குயில்" என்னும் தமிழ் திரைப்படத்தின் "காதல் ஓவியம் கண்டேன்" என்னும் பாடலை பாடி தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.

இவர் இதுவரை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் மொத்தம் ஏறக்குறைய 10,000-திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+