தம்பி ராமையா பயோடேட்டா

    தம்பி ராமையா என்பவர் தமிழகத் திரைப்படத்துறையின் நடிகரும் இயக்குனரும் ஆவார். வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் நா.அழகப்பன் என்னும் படத்தை இவர் இயக்கி, நடித்துள்ளார். இவர் கும்கி, கழுகு, தலைவா ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மைனா திரைப்படத்தில் இவரின் நடிப்புக்காக துணை நடிகருக்கான தேசிய விருதினை வென்றுள்ளார். இவர் பொதுவாக நகைச்சுவை வேடங்களிலேயே நடிக்கிறார். இவர் அவ்வப்போது படலாசிரியராகவும் பணியாற்றுகின்றார்.

    தொடக்ககாலத்தில், உதவி இயக்குனராக பணிபுரிந்த இவர், முதன் முதலில், மலபார் போலிஸ் என்ற படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

    மைனா படம் அவரது வாழ்க்கை மாறிய ஒரு திருப்புமுனையாகும்.