X
வி எஸ் ராகவன்
Actor

வி எஸ் ராகவன் பயோடேட்டா

வி.எஸ்.ராகவன் பழம்பெரும் தமிழ் நாடக மற்றும் திரைப்பட, தொலைக்காட்சி நடிகர். 1954 ஆம் ஆண்டில் வைரமாலை எனும் திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமாகி, 1500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சில திரைப்படங்களையும் இவர் இயக்கி உள்ளார்.

தமிழ்நாடு காஞ்சிபுரம் அருகேயுள்ள வேம்பாக்கம் என்ற ஊரில் பிறந்த இராகவன், பி. எஸ். உயர்நிலைப் பள்ளியிலும், செங்கல்பட்டு புனித கொலம்பசு பள்ளியிலும் கல்வி கற்று, சென்னை கிறித்துவக் கல்லூரியிலும் இரண்டாண்டுகள் கற்றார். கல்லூரிப் படிப்பை முடிக்கும் போது, தந்தை இறந்து விடவே, இராகவன் தாயாருடன் புரசைவாக்கத்தில் உள்ள சகோதரியுடன் சென்று வசித்து வந்தார்.

வி. எஸ். ராகவன், துவக்கத்தில் கே. பாலசந்தர் இயக்கிய பல மேடை நாடகங்களில் நடித்தார். நகையே உனக்கு நமஸ்காரம் என்ற பெயரில் நடித்த நாடகம் அந்த நாட்களில் மிகவும் பிரபலமானது.

வி.எஸ். ராகவனுக்கு கே.ஆர்.சீனிவாசன், கே.ஆர்.கிருஷ்ணன் என்ற இரு மகன்கள் உள்ளனர். மனைவி தங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+