வித்யா பிரதீப் பயோடேட்டா

    வித்யா பிரதீப் இந்திய திரைப்பட நடிகை மற்றும் வடிவழகி ஆவார். இவர் 2014-ம் ஆண்டு எ.எல்.விஜய் இயக்கிய சைவம் திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர்.

    கேரளா மாநிலத்தில் ஆலப்புழா நகரத்தை பிறப்பிடமாய் கொண்ட இவர், தனது கல்வியினை முடித்துவிட்டு சென்னையில் கண் மருத்துவமனை ஒன்றில் ஆராய்ச்சியாளராக பணியாற்றிவந்துள்ளார். இவர் ஸ்டெம் செல் மற்றும் செல் தெரபின் ஆகியவற்றின் நுணுக்கங்களை ஆராய்ந்து வந்துள்ளார்.

    பின்னர் மாடல் கலையில் ஆர்வம் கொண்ட இவர் தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துவந்துள்ளார். 2014-ம் ஆண்டு சைவம் திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமான இவர், 2015-ம் ஆண்டுகளில் அதிபர் மாற்றும் பசங்க 2 திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    இவர் தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி 2017-ம் ஆண்டு பங்க்கார த/பெ பங்க்காராட மனுஷ்ய என்ற கன்னட திரைப்படத்தில் நடித்து கன்னட திரையுலகிலும் அறிமுகமாகியுள்ளார். பின்னர் தமிழில் இரவுக்கு ஆயிரம் கண்கள், களரி, மாறி 2, தடம் திரைப்படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளர் 

    2019-ம் ஆண்டு இவர் நடித்து வெளிவந்த தடம் திரைப்படமானது  பெரியளவில் இவர் நடிப்பை பேசப்பட்டது. திரைப்படங்கள் மட்டுமின்றி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாயகி நாடகத்தில் கதாநாகியாக நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானவர்.