X
விவேக்
Actor/Singer

விவேக் பயோடேட்டா

விவேக் - தமிழ் திரைப்பட முன்னணி முக்கிய நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் திரைப்படங்களில் நடிகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல் ஒரு சமூக அக்கறை கொண்ட மனிதனாக பிரபலமானவர். நடிகர் விவேக் இவர் நடிக்கும் திரைப்படங்களில் நகைச்சுவையாக இலஞ்சம், மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கை போன்றவற்றை இடித்துரைப்பதால் இவரை சிலர் 'சின்னக் கலைவாணர்' என்றும் 'ஜனங்களின் கலைஞன்' என்றும் அடைமொழியிட்டு அழைக்கின்றனர்.



திரைப்பயணம்  

1990களின் தொடக்கத்தில் துணை நடிகராகத் தமிழ்த் திரை உலகில் நடிக்கத் தொடங்கிய இவர் இப்போது புகழ்பெற்ற நடிகராக உள்ளார். பெரும்பாலான திரைப்படங்களில் கதை நாயகனின் நண்பனாக வேடம் ஏற்று நடித்துள்ளார். சிந்திக்க வைக்கும் கருத்துக்களை பரப்புவதற்காக இவர் பாராட்டப்பட்டாலும், இவர் பேசும் இரட்டை பொருள் பொதிந்த வசனங்களுக்காக விமர்சிக்கப்படுவதும் உண்டு. புதுப்புது அர்த்தங்கள், மின்னலே, பெண்ணின் மனதை தொட்டு, ரன், நம்மவீட்டுக் கல்யாணம், தூள் முதலிய படங்கள் இவரது நகைச்சுவை நடிப்பில் வெளிவந்த குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.

புதுப்புது அர்த்தங்கள் படத்தில் இவர் பேசிய 'இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்' என்ற வசனம் இவரை பிரபலபடுத்தியது.

இவர் இந்திய அரசு வழங்கும் 2009 ம் ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ விருதை இவர் பெற்றார்.

இறப்பு

மாரடைப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி 2021 ஏப்ரல் 17 காலை உயிரிழந்துள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+