கண்ணன் (யார்) பயோடேட்டா

    கண்ணன் (யார் கண்ணன்) தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் குணச்சித்திர நடிகர் ஆவார். இவர் 1982-ம் ஆண்டு வடிவங்கள் என்ற திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக தமிழில் அறிமுகமானவர். பின்னர் 1985-ம் ஆண்டு "யார்" என்ற தமிழ் திகில் திரைப்படத்தினை இயக்கி தமிழ் திரையுலகில் புகழ் பெற்றவர். இந்த படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இவர் "யார் கண்ணன்" என தமிழ் திரையுலகில் பிரபலமாகியுள்ளார்.

    "யார்" கண்ணன் தமிழ் திரையுலகில் பல வெற்றி திரைப்படங்களை இயக்கி பிரபலமானவர், பின்னர் இவர் திரையுலகில் தொடர் தோல்வியினை சந்தித்து பின்தள்ளப்பட்டார். பின்பு திரைப்படங்களில் குணசித்ரா கதாபாத்திரங்களை தேர்ந்தேடுத்து நடிக்க தொடங்கியுள்ளார்.