twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஏர் உழுது பொங்கல் கொண்டாடிய விஜய் சிட்டியை விட்டு சற்றே வெளியேறி, கிராமம் ஒன்றில், படு வித்தியாசமாக பொங்கல் பண்டிகையை அட்வான்ஸ் ஆககொண்டாடி அசத்தியுள்ளார் இளைய தளபதி விஜய். தீபாவளிக்கு முன்பு சிவகாசிக்கு அதிரடியாக சென்ற விஜய், அந்த கந்தக பூமியில் தனது தீபாவளியை முன்கூட்டியேகொண்டாடி சிவகாசி மக்களுக்கு பெரும் சந்தோஷத்தைக் கொடுத்தார். அந்த ஸ்டைலில் இப்போது பொங்கல் பண்டிகையைஉழவர்கள் நிறைந்த ஒரு குக்கிராமத்தில் போய் கொண்டாடி அந்தக் கிராமத்துக்கு இன்ப விருந்து கொடுத்துள்ளார். சென்னையிலிருந்து திருவள்ளூர் செல்லும் சாலையில், வெள்ளவேடு என்ற கிராமத்திற்கு அருகே உள்ளது நேமம். பச்சை பசேல்என நிறைய வயல்கள், கொஞ்சம் போல வீடுகள், ஏகப்பட்ட ஆடு, மாடுகள் என அட்டகாசமான பாரதிராஜா கிராமம் நேமம். இந்த கிராமத்தில் தான் விஜய் தனது பொங்கலைக் கொண்டாடினார். விஜய் வருகிறார் என்ற தகவல் பரவியதும், நேமத்தைச்சுற்றியுள்ள பட்டிதொட்டியெங்கும் உள்ள விஜய் ரசிகர்கள் நேமத்திற்குப் படையெடுத்தனர். இதனால் ரசிகர்களின் கூட்டத்தால் நேமம் விழி பிதுங்கியது. சனிக்கிழமை பிற்பகல் 12 மணியளவில் நேமத்தின் எல்லையைத்தொட்டார் விஜய். கிராம எல்லையில் தாரை, தப்பட்டை, மாலை மரியாதைகளுடன் விஜய்க்கு செமத்தியான வரவேற்புகொடுக்கப்பட்டது. பளிச்சிட்ட பட்டு வேட்டி, சட்டையில் அக்மார்க் தமிழனாக வந்த விஜய், ஊர்வலமாக ஊர் மத்தியில் உள்ள மாரியம்மன்கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஊர்வலத்தின் முன்பாக பொய்க்கால் குதிரை, கரகாட்டம், நையாண்டி மேளம் எனஊர் மக்கள் கலக்கி விட்டனர். மாரியம்மன் கோவிலில் விஜய்க்கு ஊர்ப் பெரிசுகள் பரிவாரம் கட்டினர். பின்னர் அங்கிருந்து குறுக்குப்பாக்கம் என்ற இடத்தில்உள்ள அரசமரப் பிள்ளையார் கோவிலுக்கு சென்றார் விஜய். அங்கு கிராமத்து பெண்கள் கூடி சர்க்கரைப் பொங்கல் வைத்துக்காத்திருந்தனர். விஜய் வந்தவுடன், பெண்டு, பிள்ளைகள் அனைத்தும் அவரை சூழ்ந்து கொண்டு ஆளுக்கு ஒரு வாய் என சர்க்கரைப் பொங்கலைவிஜய்க்குக் கொடுத்து அவரை திக்குமுக்காட வைத்து விட்டனர். அனைவரையும் ஏமாற்றாமல் பொங்களை சுவைத்துசாப்பிட்டு மகிழ்ந்தார் விஜய். பின்னர் ஒரு பெண்மணி, மண்சட்டியில் கம்பங்கூழைக் கொண்டு வந்து விஜய்யிடம் கொடுக்க, அதை அப்படியே வாங்கிஅலேக்காக குடித்து கூட்டத்தினரின் கூச்சலைப் பரிசாகப் பெற்றார் விஜய். பிறகு குழந்தை ஒன்றுக்கு சரவணன் என்று பெயர்சூட்டினார், அப்புறம் ஏழை, எளியவர்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்கினார். இந்த சமாச்சாரங்களை முடித்துக் கொண்ட விஜய், அப்படியே வயல் பக்கம் நடையைப் போட்டார். ஏற்றிக் கட்டிய வேட்டியுடன்வந்த விஜய்யைப் பார்த்ததும் வயல் வேலையில் இருந்த பெண்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். நானும் வரட்டா என்று விஜய் கேட்க, அட என்ற ஆச்சர்யத்துடன் அவரை வயலுக்குள் பிரவேசிக்கச் செய்தார்கள் விவசாயிகள்.பின்னர் ஏர் உழுது கொண்டிருந்தவர்களிடம் எப்படி உழுவது என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்ட விஜய், கலப்பையைப்பிடித்து சிறிது தூரம் உழுதார். பின்னர் கதிர் அறுத்த பெண்களோடு சேர்ந்து தானும் சில பயிர்களை அறுத்து தூக்கிப் போட்டுப் பிடித்து ஒரு ஆட்டம் போட்டுகிராமத்தினரை சந்தோஷப்படுத்தினார். அப்புறம் அறுக்கப்பட்ட நெற்கதிர்களை போரடிக்கும் பகுதிக்கு வந்த அவர் தானும் சிலபயிர்களை சேர்த்துப் பிடித்து போரடித்தார். முதலில் போரடிக்க வரவில்லை. சில விநாடி பிராக்டிஸுக்குப் பிறகு நிபுணத்துவம் பெற்று அட்டகாசாக போரடித்தார். விஜய்யைசற்றும் எதிர்பார்க்காத கிராமத்து மக்கள் அவரது கையைப் பிடித்தும், தாடையைப் பிடித்தும் சந்தோஷப்பட்டனர். வயதான பெண்கள், என் ராசா என்று நெட்டி முறித்து கன்னத்தில் உம்மா கொடுத்து விஜய்யை உணர்ச்சிவசப்பட வைத்தார்கள்.இப்படியாக மாலை 5 மணி வரை நேமத்திலேயே கழித்தார் விஜய். என்ன இப்படி திடீரென கிராமத்தில் வந்து பொங்கல் என்றுசெய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது, உழவர் திருநாள் தான் பொங்கல். இங்கு உழவர்கள் அதிகம் என்று கேள்விப்பட்டேன். அது தான் அவர்களுடன் சேர்ந்துபொங்கல் கொண்டாட வந்து விட்டேன். இது இனிய அனுபவம், மனதுக்கு நிறைவாக இருந்தது. எனது அம்மா, அப்பாவுடன் கொண்டாடியபோது இருந்ததை விட இந்தப் பொங்கல் ரொம்ப சந்தோஷமாகவும், நிறைவாகவும்இருந்தது என்று சந்தோஷத்துடன் தெரிவித்த விஜய், அதே சந்தோஷத்தை மனதிலும் நிரப்பியபடி நேமம் மக்களிடமிருந்துவிடைபெற்று பட்டணத்திற்குத் திரும்பினார்.

    By Staff
    |

    சிட்டியை விட்டு சற்றே வெளியேறி, கிராமம் ஒன்றில், படு வித்தியாசமாக பொங்கல் பண்டிகையை அட்வான்ஸ் ஆககொண்டாடி அசத்தியுள்ளார் இளைய தளபதி விஜய்.

    தீபாவளிக்கு முன்பு சிவகாசிக்கு அதிரடியாக சென்ற விஜய், அந்த கந்தக பூமியில் தனது தீபாவளியை முன்கூட்டியேகொண்டாடி சிவகாசி மக்களுக்கு பெரும் சந்தோஷத்தைக் கொடுத்தார். அந்த ஸ்டைலில் இப்போது பொங்கல் பண்டிகையைஉழவர்கள் நிறைந்த ஒரு குக்கிராமத்தில் போய் கொண்டாடி அந்தக் கிராமத்துக்கு இன்ப விருந்து கொடுத்துள்ளார்.

    சென்னையிலிருந்து திருவள்ளூர் செல்லும் சாலையில், வெள்ளவேடு என்ற கிராமத்திற்கு அருகே உள்ளது நேமம். பச்சை பசேல்என நிறைய வயல்கள், கொஞ்சம் போல வீடுகள், ஏகப்பட்ட ஆடு, மாடுகள் என அட்டகாசமான பாரதிராஜா கிராமம் நேமம்.

    இந்த கிராமத்தில் தான் விஜய் தனது பொங்கலைக் கொண்டாடினார். விஜய் வருகிறார் என்ற தகவல் பரவியதும், நேமத்தைச்சுற்றியுள்ள பட்டிதொட்டியெங்கும் உள்ள விஜய் ரசிகர்கள் நேமத்திற்குப் படையெடுத்தனர்.


    இதனால் ரசிகர்களின் கூட்டத்தால் நேமம் விழி பிதுங்கியது. சனிக்கிழமை பிற்பகல் 12 மணியளவில் நேமத்தின் எல்லையைத்தொட்டார் விஜய். கிராம எல்லையில் தாரை, தப்பட்டை, மாலை மரியாதைகளுடன் விஜய்க்கு செமத்தியான வரவேற்புகொடுக்கப்பட்டது.

    பளிச்சிட்ட பட்டு வேட்டி, சட்டையில் அக்மார்க் தமிழனாக வந்த விஜய், ஊர்வலமாக ஊர் மத்தியில் உள்ள மாரியம்மன்கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஊர்வலத்தின் முன்பாக பொய்க்கால் குதிரை, கரகாட்டம், நையாண்டி மேளம் எனஊர் மக்கள் கலக்கி விட்டனர்.

    மாரியம்மன் கோவிலில் விஜய்க்கு ஊர்ப் பெரிசுகள் பரிவாரம் கட்டினர். பின்னர் அங்கிருந்து குறுக்குப்பாக்கம் என்ற இடத்தில்உள்ள அரசமரப் பிள்ளையார் கோவிலுக்கு சென்றார் விஜய். அங்கு கிராமத்து பெண்கள் கூடி சர்க்கரைப் பொங்கல் வைத்துக்காத்திருந்தனர்.

    விஜய் வந்தவுடன், பெண்டு, பிள்ளைகள் அனைத்தும் அவரை சூழ்ந்து கொண்டு ஆளுக்கு ஒரு வாய் என சர்க்கரைப் பொங்கலைவிஜய்க்குக் கொடுத்து அவரை திக்குமுக்காட வைத்து விட்டனர். அனைவரையும் ஏமாற்றாமல் பொங்களை சுவைத்துசாப்பிட்டு மகிழ்ந்தார் விஜய்.


    பின்னர் ஒரு பெண்மணி, மண்சட்டியில் கம்பங்கூழைக் கொண்டு வந்து விஜய்யிடம் கொடுக்க, அதை அப்படியே வாங்கிஅலேக்காக குடித்து கூட்டத்தினரின் கூச்சலைப் பரிசாகப் பெற்றார் விஜய். பிறகு குழந்தை ஒன்றுக்கு சரவணன் என்று பெயர்சூட்டினார், அப்புறம் ஏழை, எளியவர்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்கினார்.

    இந்த சமாச்சாரங்களை முடித்துக் கொண்ட விஜய், அப்படியே வயல் பக்கம் நடையைப் போட்டார். ஏற்றிக் கட்டிய வேட்டியுடன்வந்த விஜய்யைப் பார்த்ததும் வயல் வேலையில் இருந்த பெண்கள் அவரை சூழ்ந்து கொண்டனர்.

    நானும் வரட்டா என்று விஜய் கேட்க, அட என்ற ஆச்சர்யத்துடன் அவரை வயலுக்குள் பிரவேசிக்கச் செய்தார்கள் விவசாயிகள்.பின்னர் ஏர் உழுது கொண்டிருந்தவர்களிடம் எப்படி உழுவது என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்ட விஜய், கலப்பையைப்பிடித்து சிறிது தூரம் உழுதார்.

    பின்னர் கதிர் அறுத்த பெண்களோடு சேர்ந்து தானும் சில பயிர்களை அறுத்து தூக்கிப் போட்டுப் பிடித்து ஒரு ஆட்டம் போட்டுகிராமத்தினரை சந்தோஷப்படுத்தினார். அப்புறம் அறுக்கப்பட்ட நெற்கதிர்களை போரடிக்கும் பகுதிக்கு வந்த அவர் தானும் சிலபயிர்களை சேர்த்துப் பிடித்து போரடித்தார்.


    முதலில் போரடிக்க வரவில்லை. சில விநாடி பிராக்டிஸுக்குப் பிறகு நிபுணத்துவம் பெற்று அட்டகாசாக போரடித்தார். விஜய்யைசற்றும் எதிர்பார்க்காத கிராமத்து மக்கள் அவரது கையைப் பிடித்தும், தாடையைப் பிடித்தும் சந்தோஷப்பட்டனர்.

    வயதான பெண்கள், என் ராசா என்று நெட்டி முறித்து கன்னத்தில் உம்மா கொடுத்து விஜய்யை உணர்ச்சிவசப்பட வைத்தார்கள்.இப்படியாக மாலை 5 மணி வரை நேமத்திலேயே கழித்தார் விஜய். என்ன இப்படி திடீரென கிராமத்தில் வந்து பொங்கல் என்றுசெய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது,

    உழவர் திருநாள் தான் பொங்கல். இங்கு உழவர்கள் அதிகம் என்று கேள்விப்பட்டேன். அது தான் அவர்களுடன் சேர்ந்துபொங்கல் கொண்டாட வந்து விட்டேன். இது இனிய அனுபவம், மனதுக்கு நிறைவாக இருந்தது.

    எனது அம்மா, அப்பாவுடன் கொண்டாடியபோது இருந்ததை விட இந்தப் பொங்கல் ரொம்ப சந்தோஷமாகவும், நிறைவாகவும்இருந்தது என்று சந்தோஷத்துடன் தெரிவித்த விஜய், அதே சந்தோஷத்தை மனதிலும் நிரப்பியபடி நேமம் மக்களிடமிருந்துவிடைபெற்று பட்டணத்திற்குத் திரும்பினார்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X