twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சந்தியாவும் உண்மை செண்டிமென்டும் இது என்னமோ தெரியவில்லை. உண்மைச் சம்பவத்தை வைத்து எடுக்கப்படும் கதை என்றால் அதில் நடிக்க சந்தியாவைக்கூப்பிட்டு விடுகிறார்கள். காதல் படம் ஒரு உண்மைக் கதை என்பது அனைவருக்கும் தெரியும். அந்தப் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பின்கோலிவுட்டில் ஒரு செண்டிமென்ட் பற்றிக் கொண்டுள்ளது. அதாவது உண்மையில் நடந்த சம்பவங்களை வைத்து படத்தைஎடுத்தால் அதில் சந்தியாவை ஹீரோயினாக்க முயற்சிக்கிறார்கள்.பரத்துக்கும் வலை வீசுகிறார்கள். ஆனால், கதை நன்றாக இருந்தால் மட்டுமே அவர் ஆட்டைக்கு வருகிறார். இல்லாவிட்டால்கும்பிடு போட்டுவிடுகிறார்.காதல் படத்தின் மூலம் வயசுப் பசங்களையும் வயசுப் போன பசங்களையும் கவர்ந்திழுந்த சந்தியா இப்போது 3 படங்களில்நடித்துக் கொண்டிருக்கிறார்.சிம்புவுடன் வல்லவன், ஜீவாவுடன் டிஷ்யூம், மீண்டும் பரத்துடன் கூடல் நகர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில்வல்லவனில் சந்தியாவுக்குப் போட்டியாக நயனதாரா, ரீமாசென் ஆகியோர் உள்ளனர். அதே போல கூடல் நகர் படத்திலும்இன்னொரு ஹீரோயினாக மலையாளத்தைச் சேர்ந்த பாவனா இருக்கிறார்.ஆனால், எத்தனை ஹீரோயின் இருந்தாலும் சரி தனக்கு வருகிற படங்களை எல்லாம் அப்படியே அள்ளி இடுப்பில் செறுகிக்கொள்கிறார் சந்தியா. அந்த வகையில் மேலும் 3 படங்களில் புக் ஆகியிருக்கிறார்.இந்த மூன்றில் இரண்டு படங்கள் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்படுபவையாம். அதைச்சொல்லியே சந்தியாவிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார்கள்.ஸ்ரீ வேலாயுத சாமி பிலிம்ஸ் தயாரிக்கும் படம் "ஒரு வார்த்தை பேசு என்ற ஒரு படத்தில் கதாநாயகனாக விமல் என்பவர்அறிமுகமாகிறார். காதல் மாதிரி இதுவும் ஒரு உண்மைக் கதை தானாம். காரைக்குடி பகுதியில் நடந்த ஒரு உண்மைசம்பவத்தைத் தான் படமாக்குகிறார்களாம்.இதேமாதிரி இவர் அட்வான்ஸ் வாங்கியுள்ள இன்னொரு படமும் உண்மை சம்பவக் கதை தான் என்கிறார்கள்.இதற்கிடையே சந்தியாவையும் பரத்தையும் வைத்து ஷங்கர் தயாரிப்பில் காதல் படத்தை எடுத்த இயக்குனர் பாலாஜி சக்திவேல்மீண்டும் இருவரையும் வைத்து ஒரு படம் எடுக்க திட்டமிட்டுள்ளார் என்கிறார்கள்.இப்படியாக வண்டியோட்டிக் கொண்டிருக்கும் சந்தியாவுக்கு சமீபத்தில் மிகப் பெரிய மகிழ்ச்சி தந்தது ஒரு நிகழ்ச்சி.அதாகப்பட்டது, காதல் படத்தின் கதை இப்போது புத்தக வடிவில் வெளியாகியுள்ளது. காதல் படத்தின் கதையை வசனத்தைபுத்தகமாகக் கொண்டு வந்து வெளியிட்டுள்ளார்கள். சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தான் புத்தகத்தைவெளியிட்டார்.எழுத்தாளர்கள் சுஜாதா, ஜெயமோகன், இயக்குனர்கள் பாலு மகேந்திரா, ஷங்கர், பாலாஜி சக்திவேல், பார்த்திபன் உள்ளிட்டோர்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.இதில் பேசிய அனைவருமே சந்தியாவை ஏகத்துக்கும் பாராட்டிப் பேச மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போய்விட்டார் சந்தியா.

    By Staff
    |

    இது என்னமோ தெரியவில்லை. உண்மைச் சம்பவத்தை வைத்து எடுக்கப்படும் கதை என்றால் அதில் நடிக்க சந்தியாவைக்கூப்பிட்டு விடுகிறார்கள்.

    காதல் படம் ஒரு உண்மைக் கதை என்பது அனைவருக்கும் தெரியும். அந்தப் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பின்கோலிவுட்டில் ஒரு செண்டிமென்ட் பற்றிக் கொண்டுள்ளது. அதாவது உண்மையில் நடந்த சம்பவங்களை வைத்து படத்தைஎடுத்தால் அதில் சந்தியாவை ஹீரோயினாக்க முயற்சிக்கிறார்கள்.

    பரத்துக்கும் வலை வீசுகிறார்கள். ஆனால், கதை நன்றாக இருந்தால் மட்டுமே அவர் ஆட்டைக்கு வருகிறார். இல்லாவிட்டால்கும்பிடு போட்டுவிடுகிறார்.

    காதல் படத்தின் மூலம் வயசுப் பசங்களையும் வயசுப் போன பசங்களையும் கவர்ந்திழுந்த சந்தியா இப்போது 3 படங்களில்நடித்துக் கொண்டிருக்கிறார்.

    சிம்புவுடன் வல்லவன், ஜீவாவுடன் டிஷ்யூம், மீண்டும் பரத்துடன் கூடல் நகர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில்வல்லவனில் சந்தியாவுக்குப் போட்டியாக நயனதாரா, ரீமாசென் ஆகியோர் உள்ளனர். அதே போல கூடல் நகர் படத்திலும்இன்னொரு ஹீரோயினாக மலையாளத்தைச் சேர்ந்த பாவனா இருக்கிறார்.

    ஆனால், எத்தனை ஹீரோயின் இருந்தாலும் சரி தனக்கு வருகிற படங்களை எல்லாம் அப்படியே அள்ளி இடுப்பில் செறுகிக்கொள்கிறார் சந்தியா. அந்த வகையில் மேலும் 3 படங்களில் புக் ஆகியிருக்கிறார்.


    இந்த மூன்றில் இரண்டு படங்கள் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்படுபவையாம். அதைச்சொல்லியே சந்தியாவிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார்கள்.

    ஸ்ரீ வேலாயுத சாமி பிலிம்ஸ் தயாரிக்கும் படம் "ஒரு வார்த்தை பேசு என்ற ஒரு படத்தில் கதாநாயகனாக விமல் என்பவர்அறிமுகமாகிறார். காதல் மாதிரி இதுவும் ஒரு உண்மைக் கதை தானாம். காரைக்குடி பகுதியில் நடந்த ஒரு உண்மைசம்பவத்தைத் தான் படமாக்குகிறார்களாம்.

    இதேமாதிரி இவர் அட்வான்ஸ் வாங்கியுள்ள இன்னொரு படமும் உண்மை சம்பவக் கதை தான் என்கிறார்கள்.


    இதற்கிடையே சந்தியாவையும் பரத்தையும் வைத்து ஷங்கர் தயாரிப்பில் காதல் படத்தை எடுத்த இயக்குனர் பாலாஜி சக்திவேல்மீண்டும் இருவரையும் வைத்து ஒரு படம் எடுக்க திட்டமிட்டுள்ளார் என்கிறார்கள்.

    இப்படியாக வண்டியோட்டிக் கொண்டிருக்கும் சந்தியாவுக்கு சமீபத்தில் மிகப் பெரிய மகிழ்ச்சி தந்தது ஒரு நிகழ்ச்சி.

    அதாகப்பட்டது, காதல் படத்தின் கதை இப்போது புத்தக வடிவில் வெளியாகியுள்ளது. காதல் படத்தின் கதையை வசனத்தைபுத்தகமாகக் கொண்டு வந்து வெளியிட்டுள்ளார்கள். சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தான் புத்தகத்தைவெளியிட்டார்.

    எழுத்தாளர்கள் சுஜாதா, ஜெயமோகன், இயக்குனர்கள் பாலு மகேந்திரா, ஷங்கர், பாலாஜி சக்திவேல், பார்த்திபன் உள்ளிட்டோர்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    இதில் பேசிய அனைவருமே சந்தியாவை ஏகத்துக்கும் பாராட்டிப் பேச மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போய்விட்டார் சந்தியா.

      Read more about: sandhya busy with 6 films
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X