3BHK ஒரு தமிழ் குடும்ப நாடகத் திரைப்படமாகும். இப்படத்தை ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ளார். சித்தார்த் மற்றும் சாரத்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ளார். அருண் விஷ்வா தயாரித்த இந்த படத்திற்கு, தினேஷ் கிருஷ்ணன் மற்றும் ஜிதின் ஸ்டானிஸ்லாஸ் ஒளிப்பதிவாளர்களாகவும், கணேஷ் சிவா எடிட்டராகவும் பணியாற்றியுள்ளனர்.
கதை
பிரபு மற்றும் அவரது குடும்பத்தின் வாழ்க்கைப் பயணத்தைச் சுற்றிப் படம் நகர்கிறது. நகரத்தில் ஒரு வீடு வாங்கும் கனவை நிறைவேற்ற அவர்கள் பல சவால்கள், தோல்விகள் மற்றும் மனவேதனைகளை எதிர்கொள்கிறார்கள். அந்த கனவை அவர்கள் சாதிக்கிறார்களா இல்லையா என்பதுதான் கதை.
வெளியீட்டு தேதி
3BHK திரைப்படம் 2025 ஜூலை 4ஆம் தேதி தமிழ் திரையரங்குகளில் வெளியானது.