X
4 ஜி
Tamil

4 ஜி கதை

4ஜி இயக்குனர் வெங்கட் பாக்கர் இயக்கத்தில், ஜி வி பிரகாஷ் குமார், காயத்திரி சுரேஷ், சதிஷ் மற்றும் சுரேஷ் மேனன் என திரைப்பட முக்கிய முன்னணி நடிகர்கள் பலர் நடிக்கும் நகைச்சுவை, அறிவியல் சார்ந்த திரில்லர் திரைக்கதையில் உருவாகியுள்ள திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் சி.வி. குமார் தனது "திருக்குமரன் என்டேர்டைன்மெண்ட்" என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளராக இப்படத்தின் நாயகன் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

அறிவியல் மற்றும் திரில்லர் திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஆர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் லியோ ஜான் பால் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தினை திருக்குமரன் என்டேர்டைன்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, அபி & அபி பிக்சர்ஸ் நிறுவனம் விநியோகம் செய்துள்ளது.

4ஜி படத்தின் பிரத்யேக தகவல்கள்

நடிகர் ஜி.வி. பிரகாஷ் நாயகனாக நடித்து இசையமைப்பாளராகவும் பணியாற்றியிருக்கும் இப்படமானது 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவியல் சார்ந்த திரில்லர் திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி பிரபலமாகியுள்ளது.

இப்படத்தின் இயக்குனரான திரு. வெங்கட் பக்கர் தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனரான ஷங்கரின் "" திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். 4ஜி திரைப்படத்தில் ஜி.வி பிரகாஷ் உடன் நகைச்சுவை நடிகர் சதீஸ் மற்றும் சுரேஷ் மேனன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

2016- ம் ஆண்டே இப்படத்தின் அறிவிப்புகள் வெளியாகி படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டன, இருப்பினும் சில படப்பிடிப்பு காட்சிகள் இன்னும் எடுக்கப்படாததால் இப்படம் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே இப்படத்தின் இயக்குனரான திரு. வெங்கட் பக்கர் சாலை விபத்தில் 2020 மே மாதம் உயிரிழந்துள்ளார்சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் இப்படத்தில் ஒரு பாடல் காட்சிகள் மட்டும் எடுக்கப்பட வேண்டும் என படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளரும் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+