60 வயது மாநிறம் இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, சமுத்திரகனி, இந்துஜா, குமாரவேல், சரத், மதுமிதா, மோகன்ராம், அருள் ஜோதி, பரத் ரெட்டி மற்றும் பலர் நடித்த அதிரடி த்ரில்லர் திரைப்படம். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க, பா.விஜய், பழனி பாரதி மற்றும் விவேக் பாடல்களை எழுதியுள்ளார். இப்படத்தினை வி கிரியேசன்ஸ் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார்.
இத்திரைப்படம் கோதி பன்னா சாதாரண மிகட்டு என்ற கன்னட படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது.
கதை :
ஞாபகமறதி நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை மையத்தில் தங்கவைப்பட்டிருக்கும் தந்தை கோவிந்தராஜை (பிரகாஷ் ராஜ்) பார்க்க மும்பையில் இருந்து சென்னை வருகிறார் மகன் சிவா(விக்ரம் பிரபு). மகனுடன் வெளியே செல்லும் போது காணாமல் போகிறார் பிரகாஷ்ராஜ். அவரை தேடி அழைகிறார்கள் விக்ரம் பிரவும், மருத்துவர் அர்ச்சனாவும் (இந்துஜா). இதற்கிடையே பெரிய பில்டர் ஒருவரிடம் அடியாளாக இருக்கும் ரங்கா (சமுத்திரக்கனி), தனது ஓனருக்காக அரசு அதிகாரி ஒருவரை போட்டுத் தள்ளுகிறார். காணாமல் போகும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனியிடம் சிக்கிக்கொள்கிறார். தந்தையை மகன் கண்டுபிடித்தாரா? ரவுடி சமுத்திரக்கனியிடம் மாட்டிக்கொள்ளும் பிரகாஷ்ராஜ் என்ன ஆனார் என்பது சுவாரஸ்யமான மீதிக்கதை.