X
தமிழ் » திரைப்படங்கள் » 60 வயது மாநிறம்
60 வயது மாநிறம்

60 வயது மாநிறம்

Action | 31 Aug 2018 | U | 134 Mins
Tamil

2.5 /5 Users

3.5 /5 Filmibeat

60 வயது மாநிறம் கதை

60 வயது மாநிறம் இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, சமுத்திரகனி, இந்துஜா, குமாரவேல், சரத், மதுமிதா, மோகன்ராம், அருள் ஜோதி, பரத் ரெட்டி மற்றும் பலர் நடித்த அதிரடி த்ரில்லர் திரைப்படம். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க, பா.விஜய், பழனி பாரதி மற்றும் விவேக் பாடல்களை எழுதியுள்ளார். இப்படத்தினை வி கிரியேசன்ஸ் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். இத்திரைப்படம் கோதி பன்னா சாதாரண மிகட்டு என்ற கன்னட படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது. கதை : ஞாபகமறதி நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை மையத்தில் தங்கவைப்பட்டிருக்கும் தந்தை கோவிந்தராஜை (பிரகாஷ் ராஜ்) பார்க்க மும்பையில் இருந்து சென்னை வருகிறார் மகன் சிவா(விக்ரம் பிரபு). மகனுடன் வெளியே செல்லும் போது காணாமல் போகிறார் பிரகாஷ்ராஜ். அவரை தேடி அழைகிறார்கள் விக்ரம் பிரவும், மருத்துவர் அர்ச்சனாவும் (இந்துஜா). இதற்கிடையே பெரிய பில்டர் ஒருவரிடம் அடியாளாக இருக்கும் ரங்கா (சமுத்திரக்கனி), தனது ஓனருக்காக அரசு அதிகாரி ஒருவரை போட்டுத் தள்ளுகிறார். காணாமல் போகும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனியிடம் சிக்கிக்கொள்கிறார். தந்தையை மகன் கண்டுபிடித்தாரா? ரவுடி சமுத்திரக்கனியிடம் மாட்டிக்கொள்ளும் பிரகாஷ்ராஜ் என்ன ஆனார் என்பது சுவாரஸ்யமான மீதிக்கதை.
Read More

60 வயது மாநிறம் நடிகர்கள் & படக்குழுவினர்

60 வயது மாநிறம் அணியின் தகவல்

இயக்குனர் ராதா மோகன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை இளையராஜா
தயாரிப்பாளர் கலைபுலி எஸ் தாணு
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

60 வயது மாநிறம் விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
கன்னட படம் ஒன்றில் ரீமேக் தான் இந்த 60 வயது மாநிறம் திரைப்படம். இதுவரை ரீமேக் படங்களை தவிர்த்து வந்த இயக்குநர் ராதாமோகன், ஏன் தனது முடிவை மாற்றிக்கொண்டார் என்பது படத்தை பார்க்கும் போது புரிகிறது. மொழி, அபியும் நானும், பயணம் என வெற்றிப் படங்களை தந்த பிரகாஷ்ராஜ் - ராதாமோகன் கூட்டணியின் அடுத்த வித்தியாசமான படைப்பு தான் இந்த 60 வயது மாநிறம். தலைமுறை காரணமாக தந்தை மகன் உறவில் ஏற்படும் விரசலையும், தந்தை எனும் உறவின் மகத்துவத்தையும் மிக அழகாக தந்தமைக்காக இயக்குனர் ராதாமோகனுக்கு பாராட்டுக்கள். தந்தை - மகன் உறவு, மனிதம், காதல், காமெடி, பாசம் என பல விஷயங்களையும் சுவாரஸ்யமான திரைக்கதையால் இணைத்து விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர். சோகத்தையும் மென்புன்னகையுடன் சொல்லும் வித்தை ராதாமோகனுக்க கைவந்தக்கலை. அட்வைஸ் செய்யாமல், உரக்கப் பேசாமல் அண்டர்ப்பிளே ஆக்டிங்கில் சமுத்திரக்கனி. பார்வையிலேயே ஸ்கோர் செய்கிறார். அந்த பாத்திரம் அப்படி தான் நடந்துகொள்ளும் என நம்மாளும் உணர முடிகிறது. ராதாமோகன் படம் என்றதுமே குமரவேலுக்கு டபுள் எனர்ஜி வந்துவிடும் போல. தனக்கே உரித்தான கவுண்டர் காமெடியில் கலக்கியிருக்கிறார். காசி, மதுமிதா, குமரவேல் காம்போ காட்சிகள் அனைத்துமே தியேட்டரில் அன்லிமிட்டெட் சிரிப்பலையை ஏற்படுத்துகிறது. படத்தில் நிறைய இடங்களில் அயர்வு ஏற்படுகிறது. அதற்கு காரணம் படத்தின் நீளம். இன்னும் கூட கொஞ்சம் குறைத்திருக்கலாம். அதேபோல கிளைமாக்ஸ் காட்சியும் நீண்டுகொண்டே செல்லும், முடிவில் 'அப்பாடா' ஃபீலிங்கை தருகிறது.

60 வயது மாநிறம் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

60 வயது மாநிறம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+