8 தோட்டாக்கள் கதை

  8 தோட்டாக்கள் இயக்குனர் ஸ்ரீகனேஷ் இயக்கும், புதுமுக நடிகர் வெற்றி, மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி முக்க்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கே எஸ் சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். 

  இப்படத்தின் இயக்குநரான ஸ்ரீகணேஷ், பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘நாளைய இயக்குனர் – பகுதி மூன்றின் இறுதிச் சுற்று  போட்டியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் இயக்குனர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார். 

  கதை :

  “ஒரு துப்பாக்கியில் எட்டு தோட்டாக்கள் இருந்தாலும் அந்த எட்டும் ஒரே இலக்கை நோக்கி பயணிப்பதில்லை. மாறாக அந்த எட்டு தோட்டாக்களும் வெவ்வேறு இலக்குகளை நோக்கித்தான் பாயும். இதுதான் எங்களின் ‘8 தோட்டாக்கள்’ திரைப்படத்தின் ஒரு வரி கதை.

  விரிவான கதை : 
   
  நாயகன் சத்யா (வெற்றி) தனது துப்பாக்கியை ஒரு பஸ்சில் தவறவிடுகிறார். அந்த துப்பாக்கியில் 8 குண்டுகள் இருந்தன. அந்த துப்பாக்கியை பயன்படுத்தி வங்கியில் கொள்ளை மற்றும் சில கொலைகளும் நடக்கின்றன. 
  24 மணி நேரத்தில் அந்த துப்பாக்கியை கண்டுபிடிக்க உத்தரவிடுகிறார் சத்யா. இன்ஸ்பெக்டரால் முடியாததால், அந்த வழக்கை சீனியர் ஆபிசர் பாண்டியன் (நாசர்) கையில் எடுக்கிறார். 

  மறுபுறத்தில், மூர்த்தி (எம் எஸ் பாஸ்கர்) அந்த துப்பாக்கியை பயன்படுத்தி  வங்கியை கொள்ளை அடிக்கிறார். யார் அந்த மூர்த்தி, எதற்க்காக இது போன்ற கொள்ளை கொலை செயல்களை செய்கிறார்..? அதன் காரணம் என்ன ? என்பதே மீதிக்கதை.
  **Note:Hey! Would you like to share the story of the movie 8 தோட்டாக்கள் with us? Please send it to us (popcorn@oneindia.co.in).